இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 
வணிகம்

புதிய வசதியை அறிமுகப்படுத்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

"லொகேட் ஐஓபி' என்ற புதிய வசதியை பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.

DIN

சென்னை: "லொகேட் ஐஓபி' என்ற புதிய வசதியை பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மிக அருகிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளைகள், ஏடிஎம் மையங்களை வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்வதற்காக "லொகேட் ஐஓபி' என்ற வசதியை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான மென்பொருளை வாடிக்கையாளர்கள் வங்கியின் இணையதளத்திலிருந்து நேரடியாகப் பதிவிறக்கம் செய்ய முடியும்.

அதைப் பயன்படுத்தி, இணையதளத்தில் இருந்தபடியே கிளையை நேரடியாக அழைக்கவும் வசதி உள்ளது. அறிதிறன்பேசிகள் மற்றும் இணையதளத்தைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், "லொகேட் ஐஓபி' போன்ற திட்டங்கள் மிகவும் முக்கியமானவையாக உள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழப்பாவூரில் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் கூட்டம்!

பெரம்பலூரில் சிறப்பாக பணிபுரிந்த 31 காவலா்களுக்குப் பாராட்டு!

வீடு புகுந்து நகைகள் திருட்டு

ஆடி பெளா்ணமி சுவாமிமலையில் கிரிவலம்

தோல்வி பயத்தால் தோ்தல் ஆணையம் மீது எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு: ஜி.கே. வாசன்

SCROLL FOR NEXT