மகாராஷ்டிர வங்கி 
வணிகம்

வட்டி விகிதத்தை குறைத்த மகாராஷ்டிர வங்கி!

வீடு, கார், கல்வி மற்றும் பிற கடன்களுக்கான சில்லறை வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளதாக அரசுக்குச் சொந்தமான மகாராஷ்டிர வங்கி தெரிவித்துள்ளது.

DIN

புது தில்லி: வீடு, கார், கல்வி மற்றும் பிற கடன்களுக்கான சில்லறை வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளதாக அரசுக்குச் சொந்தமான மகாராஷ்டிர வங்கி தெரிவித்துள்ளது.

புனேவைச் சேர்ந்த கடன் வழங்குநரான மகாராஷ்டிர வங்கி தனது வட்டி விகிதக் குறைப்பு, கடந்த வாரம் ரிசர்வ் வங்கி செய்த வட்டி குறைப்புக்கு ஏற்ப உள்ளது என்றது. புதிய வட்டி விகிதங்கள் வரும் ஜூன் 10 முதல் அமலுக்கு வருகிறதாக தெரிவித்துள்ளது.

வட்டி விகிதக் குறைப்புடன், வீட்டுக் கடன் தற்போது 7.35 சதவிகிதமும், கார் கடன் 7.7 சதவிகிதமும் முதல் தொடங்குகிறது. இது வங்கித் துறையில் மிகக் குறைந்த வட்டி விகிதங்களில் ஒன்றாகும்.

குறைக்கப்பட்ட வட்டி விகிதங்களின் நன்மை, அதன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த நிதி தீர்வுகளை வழங்குவதற்கும் அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கும் வங்கியின் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையைத் தொடர்ந்து, பல வங்கிகள் கடன் விகிதத்தைக் குறைத்துள்ளன, மீதமுள்ள வங்கிகள் விரைவில் இதைப் பின்பற்றும் என தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க: சென்செக்ஸ், நிஃப்டி 1% சரிந்து முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT