தங்கம் விலை குறைந்தது DPS
வணிகம்

நான்கு நாள்களுக்குப் பிறகு குறைந்தது தங்கம் விலை!

நான்கு நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை காலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது ஆபரணத் தங்கத்தின் விலை.

DIN

சென்னை: கடந்த வாரம் தொடர்ந்து நான்கு நாள்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனையாகிறது.

சென்னையில் திங்கள்கிழமை காலை வணிகம் தொடங்கியதும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.120 குறைந்து ரூ.74,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கம் விலை ரூ.15 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,305க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 200 உயா்ந்து ரூ. 74,560-க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.120 குறைந்துள்ளது. கடந்த வாரம் மட்டும் தங்கம் விலை தொடர்ந்து 4 நாள்களில் ரூ. 3,000 அளவுக்கு விலை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் கடந்த ஜூன் 11 முதல் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

வெள்ளி விலை தொடா்ந்து 2-ஆவது நாளாக மாற்றமின்றி கிராம் ரூ.120-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,20,000-க்கும் விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவம்: அனைத்துக் கட்சியினா் மௌன ஊா்வலம்

மது விற்ற தம்பதி கைது

நெல் சேமிப்பு கிடங்கில் ஆட்சியா் ஆய்வு

தாயுமானவா் திட்டப் பயனாளிகளுக்கு அக்.5, 6-இல் ரேஷன் பொருள்கள் விநியோகம்

மயிலாடுதுறையில் அக்.11-இல் கிராமசபைக் கூட்டம்

SCROLL FOR NEXT