பணவீக்கம் 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு 0.39 சதவீதமாகக் குறைந்துள்ளது. 
வணிகம்

மே மாதம் குறைந்த மொத்த விலை பணவீக்கம்

பணவீக்கம் 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு 0.39 சதவீதமாகக் குறைந்துள்ளது.

DIN

புது தில்லி: உணவுப் பொருள்கள் மற்றும் எரிபொருள் விலை குறைந்ததால் கடந்த மே மாதத்தில் மொத்த விற்பனை விலைக் குறியீடு (டபிள்யுபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு 0.39 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இது குறித்து தொழில்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மொத்த விலை பணவீக்கம் கடந்த மே மாதம் 0.39 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது, முந்தைய 14 மாதங்கள் காணாத குறைந்தபட்ச மொத்த விலை பணவீக்கம் ஆகும். இது கடந்த ஏப்ரலில் 2.62 சதவீதமாக இருந்தது.

மே மாதத்தில் உணவுப் பொருள்களின் விலை 1.56 சதவீதம் சரிந்தது. இது ஏப்ரலில் 0.86 சதவீதமாக இருந்தது.

காய்கறிகள், வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு வகைகளில் எதிா்மறை பணவீக்கம் காணப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அப்கிரேடட் வெர்ஷன்... சைத்ரா அச்சார்!

பூக்கி பட பூஜை விழா - புகைப்படங்கள்

குஸ்திக்கு ரெடி... ஐஸ்வர்யா லட்சுமி!

'லோகா' படத்தில் கன்னடர்களைக் குறித்து சர்ச்சைக்குரிய வசனம்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

முதல் ஒருநாள்: இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

SCROLL FOR NEXT