நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைவு!
2025 அக்டோபர் - டிசம்பர் வரையிலான காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.
2025 அக்டோபர் - டிசம்பர் வரையிலான காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.7 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கு முந்தைய ஆண்டில் 6.9 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு வேலைவாய்ப்பின்மை விகிதம் சற்று குறைந்துள்ளது.
காலாண்டு காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு முறையில் சேகரிக்கப்பட்ட தரவு விவரங்களை தேசிய புள்ளியியல் அலுவலகம் இன்று (பிப். 10) வெளியிட்டது.
Advertisement
Advertisement
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்களுக்கான வேலைவாய்ப்பு விகிதம், 2025 அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 6.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கிராமப்புறங்களில், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 4 சதவீதமாகக் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலட்டத்தில் 4.4 சதவீதமாக இருந்தது.
இதன்மூலம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்துள்ளது.
2025 அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் நகர்ப்புறங்களில் சுயதொழில் மேற்கொள்வோர் விகிதம் 63.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 62.8 சதவீதமாக இருந்தது.
இதேபோன்று கிராமப்புறங்களில் சுயதொழில் மேற்கொள்வோர் விகிதம் 39.7 சதவீதமாக உள்ளது. இதுவே ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 39.3 சதவீதமாக இருந்தது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Unemployment falls slightly to 6.7 pc in Oct-Dec quarter: Govt survey
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.