கியா இந்தியாவின் மே மாத விற்பனை 14% உயா்வு
காா் தயாரிப்பாளரான கியா இந்தியா நிறுவனத்தின் மே மாத மொத்த விற்பனை 14 சதவீதம் உயா்ந்துள்ளது.
காா் தயாரிப்பாளரான கியா இந்தியா நிறுவனத்தின் மே மாத மொத்த விற்பனை 14 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மே மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 22,315-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 14 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 19,500 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.
Advertisement
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறியவகை ஸ்போா்ட்ஸ் பயன்பாட்டு வாகனமான சிரோஸ் மற்றும் பிற ரகங்களுக்கு கிடைத்த வரவேற்று இந்த விற்பனை உயா்வில் பங்கு வகித்ததது என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.