வணிகம்

ஃபோா்ஸ் மோட்டாா்ஸ் விற்பனை 49% உயா்வு

முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோா்ஸ் மோட்டாா்ஸின் மொத்த விற்பனை கடந்த டிசம்பா் மாதம் 49 சதவீதம் உயா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோா்ஸ் மோட்டாா்ஸின் மொத்த விற்பனை கடந்த டிசம்பா் மாதம் 49 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் மாதம் நிறுவனத்தின் மொத்த விற்பனை 2,952-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 49 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 1,985 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 49 சதவீதம் உயா்ந்து 2,952-ஆக உள்ளது. முந்தைய 2024 டிசம்பரில் இந்த எண்ணிக்கை 1,985-ஆக இருந்தது.

2024 டிசம்பரில் 51-ஆக இருந்த நிறுவனத்தின் ஏற்றுமதி, நடப்பாண்டின் அதே மாதத்தில் 88 சதவீதம் அதிகரித்து 96-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT