முகப்பு
வணிகம்

தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையில் மாற்றமில்லை!!

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது.

Updated On : 23 ஜூன், 2025 at 4:15 AM
தங்கம் விலை குறைந்தது
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை வணிகம் தொடங்கியதும் ரூ.40 குறைந்து ரூ.73,840-க்கு விற்பனையாகிறது.

கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில், ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.73,880க்கு விற்பனையாகி வந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது.

அதுபோல, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.9,230க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையாகி வந்தது. கடந்த வாரம் இரண்டு நாள்கள் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயா்ந்த நிலையில், ஜூன் 19ஆம் தேதி ஒரு சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,680-க்கு விற்பனையாகி வந்தது.

பிறகு தங்கத்தின் விலை ஜூன் 21ஆம் தேதி சனிக்கிழமை காலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.73,880-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.120-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,20,000-க்கும் விற்பனையாகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →