மும்பை பங்குச் சந்தை  கோப்புப் படம்
வணிகம்

கடும் சரிவில் பங்குச் சந்தை! 25,000-க்கும் கீழ் குறைந்த நிஃப்டி!

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

DIN

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தை கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
81,704.07 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.46 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 526.35 புள்ளிகள் குறைந்து 81,881.82 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதற்கு முன்னதாக 800 புள்ளிகள் வரை சென்செக்ஸ் குறைந்தது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 157.15 புள்ளிகள் குறைந்து 24,955.25 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸ் பட்டியலில் இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக், இந்துஸ்தான் யூனிலீவர், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை கணிசமாகக் குறைந்துள்ளன.

அதே நேரத்தில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்கள் லாபமடைந்துள்ளன.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர், ஈரான் மீதான அமெரிக்கா தாக்குதல் ஆகியவற்றால் பங்குச் சந்தை சரிந்து வருகிறது.

இந்திய பங்குச்சந்தையைத் தொடர்ந்து ஜப்பான், ஹாங்காங், சியோல் உள்ளிட்ட ஆசிய சந்தைகள் பெரும்பாலும் சரிவில் வர்த்தமாகி வருகின்றன. அமெரிக்க பங்குச்சந்தையும் நேற்று 0.5% சரிவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 17 பைசா குறைந்து 86.72 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் கனமழை - புகைப்படங்கள்

மாநில கல்விக் கொள்கைக்கு கமல்ஹாசன் பாராட்டு

சிம்புவுடனான படம் என்ன ஆனது? வெற்றி மாறன் பதில்!

கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளி பணம், மொபைல் பறிப்பு

ஆடுகள மேற்பார்வையாளரிடம் கம்பீர் நடந்துகொண்ட விதம் சரியா? மேத்யூ ஹைடன் கூறுவதென்ன?

SCROLL FOR NEXT