எக்ஸ் 200 எஃப்இ  படம் / நன்றி - விவோ
வணிகம்

ஒன் பிளஸ்-க்கு போட்டியாக விவோவின் புதிய ஸ்மார்ட்போன்!

விவோ நிறுவனத்தின் எக்ஸ் 200 எஃப்இ ஸ்மார்ட்போன், ஜூலை மாத இரண்டாவது வாரத்தில் வெளியாகும்

DIN

விவோ நிறுவனத்தின் எக்ஸ் 200 எஃப்இ ஸ்மார்ட்போன், ஜூலை மாத இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், தைவானில் அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் 13எஸ் ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக விவோ எஸ் 200 எஃப்இ ஸ்மார்ட்போனை விவோ தயாரித்துள்ளது.

ஃபிளாக்‌ஷிப் எனப்படும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தயாராகியுள்ள இதன் விலை இந்தியாவில் ரூ. 55,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் முக்கிய அம்சமாக, சோனி நிறுவனத்தின் லென்ஸ்களை விட மேம்பட்ட திறன் உடைய ஸெய்ஸ் (Zeiss) லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை எடுப்பதில் தனித்துவமான இருக்கும்.

விவோ எக்ஸ் 200 எஃப்இ சிறப்பம்சங்கள்

  • 6.31 அங்குலத்தில் அமோலிட் திரை வழங்கப்பட்டுள்ளது.

  • திரையின் பயன்பாடு சுமூகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • தூசு மற்றும் நீர்புகாத்தன்மை உடைய IP69 திறனுடன் வருகிறது.

  • மீடியாடெக் டைமன்சிட்டி 9300+ புராசஸர் கொண்டது.

  • நினைவகத்தை 512GB வரையிலும் உள்நினைவகத்தை 12GB வரையிலும் பெருக்கிக்கொள்ளலாம்.

  • 6,500mAh பேட்டரி திறனுடன் வேகமாக சார்ஜ் செய்யும் வகையில் 90W சார்ஜிங் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • வையர் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்.

  • ஸெய்ஸ் லென்ஸுகளுடைய 3 கேமராக்கள் பின்புறம் கொடுக்கப்பட்டுள்ளன. (50MP பிரைமரி சென்சார், 50MP டெலிபோட்டோ லென்ஸ், 8MP அல்ட்ரா வைட் சென்சார்) முன்பக்க செல்ஃபி கேமராவுக்கு 50MP லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ஒரு மாதத்திற்குள் இன்னொரு ஸ்மார்ட்போனா? ஜூலை 2-ல் அறிமுகம் செய்கிறது விவோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - விருச்சிகம்

வார பலன்கள் - துலாம்

வார பலன்கள் - கன்னி

வார பலன்கள் - சிம்மம்

கீழவைப்பாறு விண்ணேற்ற மாதா கோயில் 468-வது ஆண்டுத் திருவிழா!

SCROLL FOR NEXT