சுசூகி இ-விதாரா  படம்: எக்ஸ்
வணிகம்

பிரிட்டனில் சுசூகி இ-விதாரா அறிமுகம்! இந்தியாவில் எப்போது?

பிரிட்டனில் சுசூகி இ-விதாரா அறிமுகம் செய்யப்பட்டது பற்றி...

DIN

மாருதி சுசூகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரான இ-விதாராவை பிரிட்டனில் அறிமுகம் செய்துள்ளது.

இரண்டு பேட்டரி விருப்பங்கள், 10 கலர் தேர்வுகள் என பல்வேறு அம்சங்களுடன் இந்தியாவின் இந்தாண்டு இறுதிக்குள் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

49 கிலோ வாட் ஹவர் பேட்டரி மற்றும் 61 கிலோ வாட் ஹவர் பேட்டரி விருப்பங்கள் உள்ளன.

49 கிலோ வாட் ஹவர் பேட்டரி கார் 142 பி.எச்.பி. பவரை வெளிப்படுத்தும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 346 கிலோ மீட்டர் தொலைவுக்குச் செல்லும்.

61 கிலோ வாட் ஹவர் பேட்டரி கார் 172 பி.எச்.பி. பவரை வெளிப்படுத்தும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 428 கிலோ மீட்டர் தொலைவுக்குச் செல்லும்.

இந்த காரின் ஆரம்ப விலை பிரிட்டனில் இந்திய மதிப்பின்படி ரூ. 35 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 61 கிலோ வாட் ஹவர் பேட்டரியுடன் டாப் எண்ட் மாடல் காரின் விலை ரூ. 44 லட்சம் வரை இருக்கும்.

ஆனால், குஜராத்திலேயே இந்த கார் தயாரிக்கப்படுவதால் இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது, இதன் விலை ரூ. 20 லட்சமாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார், ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக், மஹிந்திரா பிஇ6, எம்ஜி இசட்எஸ் எலக்ட்ரிக் ஆகிய கார்களுக்கு சந்தையில் போட்டியாக அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிக்கி முக்கி நெருப்பே... ரகுல் ப்ரீத் சிங்!

இயல்பின் உச்சம்... ஃபெளசி!

அழகை ரசிக்க நேரமில்லை... சாக்‌ஷி அகர்வால்!

காரைக்காலில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

பூக்கள் பூக்கும் தருணம்... அருள்ஜோதி!

SCROLL FOR NEXT