ஸ்டார் ஹெல்த் 
வணிகம்

ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் 2.84% பங்குகளை விற்பனை செய்த டபிள்யூ.எஃப்.எம். ஆசியா!

டபிள்யூ.எஃப்.எம். ஆசியா நிறுவனமானது, ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லைட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 2.84 சதவிகித பங்குகளை கிட்டத்தட்ட ரூ.701 கோடிக்கு விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: ஹாங்காங்கை தளமாகக் கொண்ட டபிள்யூ.எஃப்.எம். ஆசியா நிறுவனமானது, ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லைட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 2.84 சதவிகித பங்குகளை கிட்டத்தட்ட ரூ.701 கோடிக்கு திறந்த சந்தை மூலம் பரிவர்த்தனை செய்ததாக இன்று தெரிவித்துள்ளது.

டபிள்யூ.எஃப்.எம். ஆசியா, அதன் துணை நிறுவனமான டபிள்யூ.எஃப் மூலம், நிஃப்டி-யில் 1.66 கோடிக்கும் அதிகமான பங்குகளை அதாவது 2.84 சதவிகித பங்குகளை விற்பனை செய்துள்ளது.

பங்குகள் ஒவ்வொன்றும் ரூ.420.03 என்ற விலையில் கைமாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதன் ஒப்பந்த மதிப்பு ரூ.700.86 கோடியாக உள்ளது.

மார்ச் காலாண்டின் இறுதியில், டபிள்யூ.எஃப்.எம். ஆசியா, சென்னையை தளமாகக் கொண்ட ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லைட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 3.48 சதவிகித பங்குகளை வைத்திருந்தது.

இதற்கிடையில், எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட், ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் 2.8 சதவிகித பங்குகளை கிட்டத்தட்ட ரூ.690 கோடிக்கு, 1.64 கோடிக்கும் அதிகமான பங்குகளை வாங்கியுள்ளது.

என்எஸ்இ-யில் ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லைட் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ரூ.428.20 ஆக முடிவடைந்தது.

இதையும் படிக்க: உலகளாவிய ஏற்றத்தால் சென்செக்ஸ், நிஃப்டி 1% உயர்வுடன் முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழை எதிரொலி: அண்ணா, சென்னை பல்கலை. தேர்வுகள் சென்னை கல்லூரிகளில் ஒத்திவைப்பு!

ஓ.பி.எஸ்., தில்லி பயணம்!

Messi அணியுடன் போட்டி! தீவிர பயிற்சியில் தெலங்கானா முதல்வர்!

Silk Smitha பிறந்தநாள்! இனிப்பு, ஆடைகள் வழங்கி கொண்டாடிய ரசிகர்!

3 அடி ஆழத்திற்கு உள்வாங்கிய புதிதாக போடப்பட்ட தார் சாலை!

SCROLL FOR NEXT