அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடா மற்றும் மெக்ஸிகோ மீது விதித்த கட்டணங்களை ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நிலையில், இந்திய பெஞ்ச்மார்க் குறியீடு செயல்பாட்டில் சிறிய மாற்றத்துடன் இன்றைய வணிகம் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 7.51 புள்ளிகள் குறைந்து 74,332.58 புள்ளிகளாகவும், நிஃப்டி 7.80 புள்ளிகள் உயர்ந்து 22,552.50 புள்ளிகளாக நிலைபெற்றது.
இந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 1.5 சதவிகிதமும், நிஃப்டி 2 சதவிகிதமும் உயர்ந்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நெஸ்லே, பஜாஜ் ஆட்டோ, பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஹிண்டால்கோ உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் இண்டஸ்இண்ட் வங்கி, என்டிபிசி, ஸ்ரீராம் பைனான்ஸ், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்தது.
பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.3 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.7 சதவிகிதமும் சரிந்து முடிந்தது.
துறை வாரியாக கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், ஐடி, பவர், ரியாலிட்டி ஆகிய துறைகள் 0.5 முதல் 1 சதவிகிதம் சரிந்தும், கேப்பிட்டல் குட்ஸ், எனர்ஜி, மெட்டல், மீடியா ஆகிய துறைகள் 0.5 முதல் 2 சதவிகிதமும் உயர்ந்து முடிந்தது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள சோமேட்டோ, இண்டஸ்இண்ட் வங்கி, என்டிபிசி, இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டைட்டன், பவர் கிரிட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், டெக் மஹிந்திரா, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்த நிலையில் மறுபுறம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நெஸ்லே இந்தியா, டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தது.
ஆசிய சந்தைகளில் டோக்கியோ, ஷாங்காய், ஹாங்காங் மற்றும் சியோல் ஆகியவை சரிவுடன் முடிந்தது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.32 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 70.38 டாலராக உள்ளது.
இதையும் படிக்க: ஹீரோ மோட்டோகாா்ப் விற்பனை 17% சரிவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.