மாருதி சுசூகி எர்டிகா 
வணிகம்

சக்கைப்போடு போடும் 7-சீட்டர் கார் இதுதான்! விலைக்காகவே வாங்கலாம்!!

சக்கைப்போடு போடும் 7-சீட்டர் காரின் விலை இவ்வளவு குறைவா?

DIN

இந்திய வாகனச் சந்தையில், 7 இருக்கை வசதிகொண்ட கார்களின் தகப்பன் என்று சொல்லும் அளவுக்கு பெயர் பெற்றிருக்கிறது மாருதி சுசூகி எர்டிகா.

இந்தியாவில், எப்போதும் ஒருவர் மீது ஒருவர் அமர்ந்து செல்லும் அளவுக்கு கும்பலோடு காரை எடுக்கும் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த வாகனமாக மாறியிருக்கிறது மாருதி சுசூகி எர்டிகா. அது மட்டுமல்ல, ஏராளமான புதிய தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டு, மிக விலைக் குறைவாகவும் கிடைக்கும்போது யார்தான் வாங்க மாட்டார்கள்?

மாருதி சுசூகி எர்டிகாவில் எந்த ஒரு குறையையும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தொடர்ந்துமேம்படுத்திக்கொண்டே இருப்பதும் சிறப்பம்சம். டிஜிட்டல் கிளஸ்டர் உடன் வாகனம் இயங்கிக் கொண்டிருப்பதே தெரியாத அளவுக்கு 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு எல்லாம் கார் பிரியர்களுக்கு மிகவும் பிடித்ததாக உள்ளது.

மிக அருமையான மியூசிக் சிஸ்டம், தானியங்கி வெப்பநிலை அறியும் திறன், 40க்கும் மேற்பட்ட வசதிகளையும் கொண்டிருக்கிறது.

பெட்ரோல் மற்றும் எரிவாயுவில் இயங்கும் என இரண்டு வகையான கார்களும் விற்பனையில் உள்ளது. பெட்ரோல் கார் விலை ரூ.8.69 லட்சம். இது கார் சந்தையில், 7 இருக்கை வசதி கொண்ட வேறு எந்த காருடனும் ஒப்பிட முடியாத குறைந்த விலையாக உள்ளது. அதுபோலவே எரிவாயுவில் இயங்கும் கார்களில் இருக்கும் இரு வகையான கார்களும் கூட ரூ.10.78 லட்சம், ரூ.11.88 லட்சம் என்ற அளவில் விற்பனையில் உள்ளது.

எனவே விலையில் மாருதி சுசூகி எர்டிகாவை ஒப்பிடவே முடியாது. வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்துக்கான மதிப்புக்கு உரியதாக உள்ளது.

சொல்ல மறந்துவிட்டோமே.. பெட்ரோல் என்றால் 20 கி.மீ. மைலேஜ், எரிவாயு என்றால் 26 கிலோ மீட்டர் கொடுப்பதுதான் கூடுதல் சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸில் கடுமையாக தாக்கிக் கொண்ட போட்டியாளர்கள்! யாருக்கெல்லாம் ரெட் கார்டு?

பிகாரில் பெண்களின் நலத்திட்டங்களை நிறுத்த ஆர்ஜேடி முயற்சி: ஸ்மிருதி ராணி!

சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது! ஐடி, ஆட்டோ பங்குகள் சரிவு!

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

SCROLL FOR NEXT