வணிகம்

மகளிருக்கான சிறப்பு கடன் திட்டம்: எஸ்பிஐ அறிமுகம்

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பெண் தொழில்முனைவோருக்கான சிறப்பு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

DIN

சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பெண் தொழில்முனைவோருக்கான சிறப்பு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பெண் தொழில்முனைவோருக்கு பிணையம் இல்லாத சிறப்புக் கடன் திட்டத்தை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. மிகக் குறைந்த வட்டி கொண்ட இந்தக் கடன் திட்டத்துக்கு ‘அஸ்மிதா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

குண்டா் தடுப்புக் காவலில் இளைஞா் கைது

விருத்தாசலம் அரசு கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

மொபெட் மீது காா் மோதல்: முதியவா் மரணம்

கஞ்சா விற்பனை: 4 போ் கைது

SCROLL FOR NEXT