முகப்பு
வணிகம்

ஐபிஓவை வெளியிட கிரிசாக் நிறுவனத்திற்கு செபி ஒப்புதல்!

மாணவர் ஆட்சேர்ப்பு தீர்வு நிறுவனமான, 'கிரிசாக்' நிறுவனம், ஐ.பி.ஓ. வாயிலாக ரூ.1,000 கோடி திரட்ட, செபியின் ஒப்புதலை பெற்றுள்ளது.

Updated On : 11 மார்ச் 2025, 7:59 pm IST
பகிர்:

புதுதில்லி: மாணவர் ஆட்சேர்ப்பு தீர்வு நிறுவனமான, 'கிரிசாக்' நிறுவனம், ஐ.பி.ஓ. வாயிலாக ரூ.1,000 கோடி திரட்ட, செபியின் ஒப்புதலை பெற்றுள்ளது.

முன்மொழியப்பட்ட ஐபிஓ மூலம், பிங்கி அகர்வால் மற்றும் மனிஷ் அகர்வால் முறையே ரூ.841 கோடி மற்றும் ரூ.159 கோடி மதிப்புள்ள பங்கு பங்குகளை விற்க திட்டமிட்டனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தனது ஆவணங்களை செபி-யிடம் அனுப்பிய நிலையில், ஒழுங்குமுறை ஆணையம் ஜூலை மாதத்தில் திருப்பி அனுப்பியது.

Advertisement

Advertisement

இதையடுத்து, நவம்பரில் ஆவணங்களை மீண்டும் தாக்கல் செய்து, ஆரம்ப பங்கு விற்பனையை தொடங்க அனுமதி கோரியது. இதன் அடிப்படையில், மார்ச் 4, 2025 அன்று செபி அனுமதி கடிதத்தை வழங்கியது.

கொல்கத்தாவைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் இங்கிலாந்து, கனடா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள உலகளாவிய உயர்கல்வி நிறுவனங்களுக்கு, ஆட்சேர்ப்பு தீர்வுகளை வழங்கும் வழங்குநராக உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், கிரிசாக் அதன் தொழில்நுட்ப தளத்தில் பதிவுசெய்யப்பட்ட முகவர்கள் மூலம் 72 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்களை நடைமுறைப்படுத்தியது. 140 க்கும் மேற்பட்ட உலகளாவிய பல்கலைக்கழகங்களுடன் ஒத்துழைத்துள்ள நிலையில், கிரிசாக் இதுவரை மிகுந்த கவனத்துடன் 3.82 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர் விண்ணப்பங்களை பரிசீலனை செய்துள்ளது.

2023ஆம் நிதியாண்டில் அதன் செயல்பாடுகளிலிருந்து ஒருங்கிணைந்த வருவாய், அதன் முந்தைய ஆண்டு ரூ.263.53 கோடியிலிருந்து 79.5 சதவிகிதம் உயர்ந்து ரூ.472.97 கோடியாக உள்ளது.

வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.67.76 கோடியிலிருந்து 65.50 சதவிகிதம் அதிகரித்து ரூ.112.14 கோடியாக உள்ளதாக தெரிவித்தது.

இதையும் படிக்க: இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.87.21 ஆக முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments