வணிகம்

டெஸ்லா பங்குகள் வீழ்ச்சி! ஒரே நாளில் எலானுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு?

அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் கடும் சரிவைச் சந்தித்தன.

DIN

அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் கடும் சரிவைச் சந்தித்தன. இதனால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சரிந்துள்ளது.

அமெரிக்கத் தொழிலதிபருக்குச் சொந்தமான டெஸ்லா நிறுவனத்தின் மதிப்பு கடந்த சில நாள்களாக சரிந்து வருகிறது. மின்சார வாகன உற்பத்தியில் ஈடுபட்டுவரும் டெஸ்லாவுக்கு எதிராக அந்நாட்டில் பல்வேறு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

டெஸ்லா காரை வாங்க வேண்டாம் என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி அந்நாட்டில் மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

உலகின் முதல் நிலை பணக்காரரான எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு, கடந்த மாதம் 22.2 பில்லியன் சரிந்து 358 பில்லியனாக இருந்தது. இதற்கு பெரும்பாலும் டெஸ்லா பங்குகளில் சரிவே காரணமாக இருந்தது.

இதனிடையே திங்கள் கிழமை (மார்ச் 10) டெஸ்லாவின் மதிப்பு 15% வரை சரிந்தது. இதனால் இன்று மட்டும் எலான் மஸ்க்கிற்கு 29 பில்லியன் டாலர் (ரூ. 2.5 லட்சம் கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் இதுவரை ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு அவரின் சொத்து மதிப்பு 301 பில்லியன் டாலர்களாக உள்ளது.

அமெரிக்க செயல்திறன் மேம்பாட்டுத் துறைக்கு (டிஓஜிஇ) தலைமைப் பொறுப்பேற்றது முதலே எலான் மஸ்க்கின் தொழில் துறை வளர்ச்சியில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | அதீத உணவு சாப்பிடும் விடியோக்கள் மூலம் பிரபலமானவர் உடல் பருமனால் மரணம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT