முகப்பு
வணிகம்

ட்விட்டா் பங்குகள் வீழ்ச்சி: நீதிமன்றத்தில் எலான் மஸ்க் விளக்கம்

ட்விட்டா் பங்குகள் வீழ்ச்சி குறித்து நீதிமன்றத்தில் எலான் மஸ்க் விளக்கம்...

Updated On : 7 மார்ச், 2026 at 3:20 AM
எலான் மஸ்க் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 6 மார்ச், 2026 at 11:15 PM

‘ட்விட்டா் நிறுவனத்தை (தற்போது எக்ஸ்) கையகப்படுத்தும் முன், அதன் பங்குகள் சரிவதற்குத் தனது ட்வீட்கள் காரணமல்ல’ என்று எலான் மஸ்க் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளாா்.

பிரபல சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை, 4,400 கோடி டாலருக்கு எலான் மஸ்க் கடந்த 2022-இல் வாங்கினாா். அதற்கு முன்பு நிறுவனத்தின் மதிப்பைக் குறைக்கும் எலான் மஸ்க்கின் முயற்சியில், முதலீட்டாளா்களுக்குப் பல கோடி டாலா் இழப்பு ஏற்பட்டதாகக் கூறி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையில் ஆஜரான எலான் மஸ்க், ‘ட்விட்டா் வழங்கிய தகவல்கள் பொய்யானவை. அத்தளத்தில் 20 சதவீதத்துக்கும் மேல் போலிக் கணக்குகள் இருந்தன’ என்று மீண்டும் வலியுறுத்தினாா்.

Advertisement

தொடா்ந்து சாட்சியமளித்த ட்விட்டா் நிறுவன முன்னாள் அதிகாரி, எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டுகளை நிராகரித்ததோடு, சுமாா் 1 சதவீத போலி கணக்குகளே இருந்ததாகவும் குறிப்பிட்டாா்.