ஈரான் போர்! மோடி, டிரம்ப்புடன் எலான் மஸ்க் உரையாடல்?
இஸ்ரேல் - ஈரான் போர் குறித்த பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க்கும் இணைந்ததாகத் தகவல்
இஸ்ரேல் - ஈரான் போர் குறித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க்கும் இணைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பிப்ரவரி 28 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. போரின் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமின்மை நிலவி வருகிறது.
இதனிடையே, போர் தொடங்கி சுமார் ஒரு மாதம் கழித்து, டிரம்ப்புடன் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமையில் (மார்ச் 24) தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
Advertisement
Advertisement
போரின் பாதிப்புகள், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், உலக அமைதி குறித்து இருவரும் உரையாடினர்.
இந்த நிலையில், இருவரின் தொலைபேசி உரையாடலில் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கும் இணைந்திருந்ததாக அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இரு நாட்டுத் தலைவர்களின் அதிகாரபூர்வ தொலைபேசி உரையாடலில் தனி நபர் ஒருவர் பங்கேற்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அரிதான நிகழ்வாகவும் கொள்ளப்படுகிறது.
இந்த உரையாடலில் எலான் மஸ்க்கின் பங்கேற்பு குறித்தும், அவர் என்ன பேசினார் என்பது குறித்தும் தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை.
இருப்பினும், மத்திய கிழக்கு நாடுகளிலும் எலான் மஸ்க் முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Elon Musk joins PM Modi-Trump call in unusual move amid Iran war: Report
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.