டாடா மோட்டார்ஸ் 
வணிகம்

வர்த்தக வாகனங்களின் விலையை உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!

டாடா மோட்டார்ஸ் அதன் வர்த்தக வாகனங்களின் விலையை, 2025 ஏப்ரல் முதல், 2 சதவிகிதம் வரை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: டாடா மோட்டார்ஸ் அதன் வர்த்தக வாகனங்களின் விலையை, 2025 ஏப்ரல் முதல், 2 சதவிகிதம் வரை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 1, 2025 முதல் நிறுவனத்தின் வணிக வாகனத்தின் விலை 2 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று டாடா மோட்டார்ஸ் தனது ஒழுங்குமுறை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த விலை உயர்வு உள்ளீட்டு செலவுகளின் அதிகரிப்பை ஈடுகட்டுவதாகும், இது தனிப்பட்ட மாடல் மற்றும் மாறுபாட்டிற்கு ஏற்ப விலை மாறுபடும் என்று தெரிவித்தது.

165 பில்லியன் டாலர் டாடா குழுமத்தின் ஒரு பகுதியான டாடா மோட்டார்ஸ் 44 பில்லியன் டாலர் நிறுவனமாகும். டாடா மோட்டார்ஸ் கார்கள், பயன்பாட்டு வாகனங்கள், டிரக்குகள் மற்றும் பேருந்துகளை உற்பத்தி செய்து வருகிறது.

மும்பை பங்குச் சந்தையில் டாடா மோட்டார்ஸின் பங்கின் விலையானது 0.85 சதவிகிதம் வரை உயர்ந்து ரூ.660.90 ஆக முடிந்தது.

இதையும் படிக்க: ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ.86.81-ஆக முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT