தனது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக கூகுள் க்ளவுடுடன் ஏற்கெனவே பேணிவரும் கூட்டுறவை இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா விரிவுபடுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கூகுள் க்ளவுட் நிறுவனத்துடன் டெக் மஹிந்திரா நீண்டகால கூட்டுறவைக் கொண்டுள்ளது. இந்தச் சூழலில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பயன்பாட்டை மேம்படுத்தும் நிறுவனத்தின் முயற்சிக்கு உதவும் வகையில், இந்தக் கூட்டறவை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம், இரு நிறுவனங்களும் இணைந்து செயற்கை நுண்ணறிவுத் தீா்வுகளைக் கொண்டு உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்குதல், தரவு கூறுகளை அதிகபட்ச செயல்திறன் கொண்டதாக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.