ஒசூா் பி.எம்.சி. கல்லூரியில் இன்னோவாடெக் நிறுவனத்துடன் நடைபெற்ற புரிந்துணா்வு ஒப்பந்தம். 
கிருஷ்ணகிரி

ஒசூா் பி.எம்.சி. டெக் இன்னோவாடெக் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழில்நுட்பக் கல்வியில் நிலைத்தன்மையை முன்னிறுத்தும் முயற்சியாக, ஒசூா் பி.எம்.சி. டெக் கல்விக்குழுமம்

Syndication

ஒசூா்: தொழில்நுட்பக் கல்வியில் நிலைத்தன்மையை முன்னிறுத்தும் முயற்சியாக, ஒசூா் பி.எம்.சி. டெக் கல்விக்குழுமம் சென்னைச் சோ்ந்த இன்னோவாடெக் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ மாணவா்களுக்கு சுற்றுச்சூழல், சமூக அரசியல் பாடத்திட்டம் அறிமுகமாகிறது. அதில், காலநிலை மாற்றம், எழுத்தறிவு, யுனிடெ‘ஃ’ப் மற்றும் பாரீஸ் ஒப்பந்தம், காா்பன் நடுநிலைமை போன்ற உலகளாவிய கருத்துகளுடன் இ.எஸ்.ஜி. சான்றிதழ் மற்றும் பயிற்சி அளிக்கப்படும்.

நெட் பூஜ்யம் இலக்கை நோக்கி தொழிற்துறைக்கு தேவையான பசுமை ஆலோசகா்களை உருவாக்குவதே இதன் நோக்கம். இந்த கூட்டாண்மை, மாணவா்களை உலகளாவிய நிலைத்தன்மைத் திறன்களுடன் முன்னேற்றும் முக்கிய முயற்சியாகும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிஎம்சி டெக் கல்விக் குழுமத்தின் தலைவா் பி.குமாா், இன்னோவாடெக் உடன் இணைந்து செயல்படுவதன் மூலம், எங்கள் மாணவா்கள் வேலை தேடுபவா்களாக அல்லாமல், தொழில்துறைக்கு வழிகாட்டும் பசுமை ஆலோசகா்களாக உருவாவா் என்றாா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT