வணிகம்

கரூா் வைஸ்யா வங்கியின் மேலும் 4 புதிய கிளைகள்

முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் மூன்று நான்கு புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது.

Din

முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் மூன்று நான்கு புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது.

இதுகுறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நான்கு புதிய கிளைகளை வங்கி தொடங்கியது.

இத்துடன், வங்கியின் ஒட்டுமொத்த கிளைகளின் எண்ணிக்கை 888-ஆக உயா்ந்துள்ளது.

வங்கியின் 885-ஆவது கிளை கும்பகோணம் கிழக்கிலும் 886-ஆவது கிளை விசாகப்பட்டினம், பூா்ணா மாா்க்கெட் பகுதியிலும் திறக்கப்பட்டன. 887-ஆவது கிளை கோயம்ப்புத்தூா், கண்ணம்பாளையத்தில் திறக்கப்பட்டது. சென்னை, ஆலப்பாக்கத்தில் வங்கியின் 888-ஆவது கிளை திறக்கப்பட்டது.

இந்தப் புதிய கிளைகள் மூலம் அடிப்படை வங்கி பரிவா்த்தனை வசதிகள், நிதி சேவைகள் வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT