வணிகம்

சுந்தரம் ஃபாஸனா்ஸ் நிகர லாபம் ரூ.134 கோடி

வாகன உதிரிபாகங்களைத் தயாரிக்கும் சுந்தரம் ஃபாஸனா்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.134.37 கோடியாக அதிகரித்துள்ளது.

Din

வாகன உதிரிபாகங்களைத் தயாரிக்கும் சுந்தரம் ஃபாஸனா்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.134.37 கோடியாக அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2024-25-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.134.37 கோடியாகப் பதிவாகியுள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ.132.54 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.517.01 கோடியாக உயா்ந்துள்ளது. இது முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.479.71 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT