ஓலா ரோட்ஸ்டர் படம் / நன்றி - ஓலா
வணிகம்

ஓலா ரோட்ஸ்டர் டெலிவரியில் தாமதம்! இதுவரை ஒரு வண்டி கூட விற்கவில்லை!

ஓலா நிறுவனத்தின் ரோட்ஸ்டர் மின்னணு இருசக்கர வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

DIN

ஓலா நிறுவனத்தின் ரோட்ஸ்டர் மின்னணு இருசக்கர வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரியில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்குக் கூட இன்னும் இந்த இருசக்கர வாகனங்கள் கொண்டு சேர்க்கப்படவில்லை.

கர்நாடகத்தைச் சேர்ந்த ஓலா நிறுவனம் மின்னணு இருசக்கர வாகனத் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய ரோட்ஸ்டர் இருசக்கர வாகனத்துக்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது.

கடந்த பிப்ரவரியில் முன்பதிவு தொடங்கிய நிலையில், 1,395 பேர் இதுவரை ரோட்ஸ்டர் வாகனங்களை முன்பதிவு செய்துள்ளனர்.

முன்பதிவு செய்தவர்களுக்கு மே மாதத்திலிருந்து டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அறிவித்தபடி வாகனங்களை டெலிவரி செய்வதில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது.

தாமதத்துக்கான காரணம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ஓலா நிறுவனம் வெளியிடவில்லை. எனினும், ’ஹோமோலோகேஷன்’ செயல்முறையால் தாமதம் ஏற்படுவதாகத் தெரிகிறது.

அதாவது, புதிதாக தயாரிக்கப்படும் வாகனங்கள் குறிப்பிட்ட நாடு அல்லது நிலப்பரப்புக்கு ஏற்ப பாதுகாப்பு, சாலை இயங்கு திறன் கொண்டுள்ளதா? என்பதை பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கும் முறையில் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் வாகனங்களை கொண்டுசேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அது எந்த அளவுக்கு எனில், இதுவரை ஒரு வாகனம் கூட வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

சிறப்புகள் என்னென்ன?

மின்னணு வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் ஓலா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ரோட்ஸ்டர், எக்ஸ் மற்றும் எக்ஸ்+ என்ற இரு வகைகளில் உருவாக்கப்பட்டுள்ளன.

ரோட்ஸ்டர் எக்ஸ், 5 kWh, 3.5 kWh, மற்றும் 4.5 kWh என மூன்று வகையிலான பேட்டரி திறன்களுடன் வருகிறது. அதிகபட்சமாக 118 kmph வேகம் செல்லக்கூடியது. வெறும் 3.1 வினாடிகளில் 0-40 கி.மீ. வேகத்தை எட்டும் திறன் கொண்டது. ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் 252 கி.மீ. தூரம் செல்லக்கூடியது.

ரோட்ஸ்டர் எக்ஸ்+ வகையானது, 4.5 kWh மற்றும் 9.1 kWh பேட்டரி திறன்களுடன் வருகிறது. இந்த வகையில் அதிகபட்சமாக 125 kmph வேகத்தை எட்டமுடியும். 2.7 வினாடிகளில் 0-40 கி.மீ. வேகத்தை எட்டும் திறன் கொண்டது. சிறிய பேட்டரியில் 252 கி.மீ. தூரமும், பெரிய பேட்டரியில் 501 கி.மீ. தூரமும் செல்லக்கூடியது.

இதையும் படிக்க | சாம்சங்கிற்கு போட்டியாக மடிக்கக்கூடிய ஆப்பிள் ஐ-போன்! 2026-ல் அறிமுகம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியிடம் பேசினேன்! வணிகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்! மீண்டும் Trump

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

நெல்லையில் செப். 7 வாக்குத் திருட்டு விளக்க மாநாடு! பிரியங்கா பங்கேற்பு?

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

SCROLL FOR NEXT