ஐபிஎல் 2026 தொடருக்கான அட்டவணை தயாரித்து வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை மிக பிரம்மாண்டமாக பிசிசிஐ நடத்தி வருகின்றது.
ஐபிஎல் 2026 தொடருக்கான மினி ஏலம் முடிந்து அனைத்து அணிகளும் அவர்களின் வீரர்களை இறுதி செய்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மார்ச் முதல் மே மாதத்துக்குள் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடும் 15-க்கும் மேற்பட்ட போட்டிகள் தேர்தல் நடைபெறவுள்ள சென்னை மற்றும் கொல்கத்தா திடல்களில் நடைபெறவுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு சமயத்தில் இந்த இரண்டு திடல்களில் போட்டிகளை நடத்தினால் சிக்கல் ஏற்படும். தமிழகத்தில் பெரும்பாலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்படும். ஆனால், மேற்கு வங்கத்தில் கடந்த முறை 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.
ஆகையால், தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்பே, ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தகவல்கள் வெளிவந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.