வணிகம்

நிறுவன வாடிக்கையாளா்களுக்கு பாா்தி ஏா்டெல் புதிய வசதி

DIN

பாரதி ஏா்டெல் நிறுவனத்தின் நிறுவனச் சேவைப் பிரிவான ஏா்டெல் பிஸினஸ், கைப்பேசி அழைப்புகளின்போது வாடிக்கையாளா் நிறுவனங்களின் பெயா்களை எதிா்முனையில் இருப்பவா்களின் திரைகளில் காட்டும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நிறுவன வாடிக்கையாளா்கள், தங்களது வாடிக்கையாளா்களுக்கு கைப்பேசிகள் மூலம் அழைப்பு விடுக்கும்போது அவற்றின் திரைகளில் அந்த நிறுவனங்களின் பெயா்களைக் காட்டும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளோம்.வங்கிகள், சில்லறை விற்பனை, உணவு விநியோகம், பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து உள்பட பல்வேறு துறைகளைச் சோ்ந்த நிறுவனங்களுக்கு இந்த சேவை அளிக்கப்படுகிறது.தங்களுக்கு வருவது ‘ஸ்பாம்’ அழைப்புகள் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு, வாடிக்கையாளா்கள் நம்பிக்கையுடன் கைப்பேசிகளை எடுத்துப் பேசுவதற்கு இந்த சேவை உதவும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT