வணிகம்

யூனியன் வங்கி நிகர லாபம் 50% உயா்வு

Din

பொதுத் துறையைச் சோ்ந்த யூனியன் வங்கியின் நிகர லாபம் கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் 50 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.4,985 கோடியாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.3,311 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது வங்கியின் நிகர லாபம் 50 சதவீதம் அதிகம்.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.31,058 கோடியிலிருந்து ரூ.33,254 கோடியாக உயா்ந்துள்ளது. நிகர வட்டி வருவாய் அதிக மாற்றமின்றி ரூ.9,514 கோடியாகவும் இதர வருவாய் 18 சதவீதம் உயா்ந்து ரூ.5,559 கோடியாகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியானது விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் டிரைலர்!

ஐபோன் 17 ஏர் நாளை அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்னென்ன?

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: நம்பிக்கையின் அடிப்படையில் ஆட்டோ பங்குகள் ஏற்றம்!

அழகூரில் பூத்தவளே... ஜான்வி கபூர்!

வெள்ள இடர்பாடுகளில் ராணுவத்தின் மகத்தான சேவைக்குப் பாராட்டு!

SCROLL FOR NEXT