வணிகம்

அக்ஸோ நோபல் 4-வது காலாண்டு லாபம் சரிவு!

வண்ணப்பூச்சு மற்றும் பூச்சுகள் தயாரிப்பாளரான அக்ஸோ நோபல் இந்தியா லிமிடெட், மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த 4-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.108.4 கோடியாக குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: வண்ணப்பூச்சு மற்றும் பூச்சுகள் தயாரிப்பாளரான அக்ஸோ நோபல் இந்தியா லிமிடெட், மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த 4-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.108.4 கோடியாக குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.108.7 கோடியாக பதிவு செய்தது.

மார்ச் காலாண்டில், செயல்பாடுகளிலிருந்து வந்த ஒருங்கிணைந்த வருவாய் ரூ.1,022.1 கோடியாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு இது ரூ.973.4 கோடியாக இருந்தது என்றது டியூலக்ஸ் பெயிண்ட்ஸ்.

இந்த காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செலவுகள் ரூ.887.3 கோடியாக உயர்ந்த நிலையில், கடந்த ஆண்டு இதே காலத்தில் அது ரூ.836.7 கோடியாக இருந்தது.

மார்ச் 31, 2025 முடிவடைந்த நிதியாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.429.5 கோடியாக இருந்தது. இதுவே அதன் முந்தைய ஆண்டு ரூ.426.6 கோடியாக இருந்தது.

நிதியாண்டு 2025ல் நிறுவனத்தின் செயல்பாடுகளிலிருந்து அதன் ஒருங்கிணைந்த வருவாய் ரூ.4,091.2 கோடியாக இருந்தது. இதுவே கடந்த நிதியாண்டில் இது ரூ.3,961.6 கோடியாக இருந்தது.

2024-25ஆம் ஆண்டிற்கான ஒரு பங்கிற்கு ரூ.30 என்ற ஈவுத்தொகையை, வாரியம் பரிந்துரைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.85.26 ஆக முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT