ஐடெல்  படம் / நன்றி - ஐடெல்
வணிகம்

ஏஐ தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட்போன்! ரூ. 7 ஆயிரம் மட்டுமே!

ஐடெல் நிறுவனத்தில் புதிதாக ஏ 90 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

DIN

ஐடெல் நிறுவனத்தில் புதிதாக ஏ 90 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்டவை குறித்து அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐடெல் நிறுவனம், பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.

ஆப்பிரிக்கா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் சில பகுதிகள் என, வளர்ந்துவரும் நாடுகளின் மின்னணு சந்தையில் குறிப்பிடத்தகுந்த இடங்களை ஐடெல் தயாரிப்புகள் பெற்றுள்ளன.

இந்நிலையில், புதிதாக ஐடெல் ஏ 90 என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

4ஜி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் குறிப்பிடத்தகுந்த அம்சமாக, நீர்புகாத் தன்மை மற்றும் தூசு தடுப்பான்களைக் கொண்டிருக்கும் வகையில் ஐபி57 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏவியானா 2.0 என்ற செய்யறிவு தொழில்நுட்ப அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. ரூ. 7 ஆயிரம் விலைக்கு ஒரு ஸ்மார்ட்போனில் இந்த சிறப்பம்சங்கள் இடம்பெறுவது அரிதானது.

ஐடெல் ஏ 90 விலை என்ன?

ஐடெல் ஏ 90 ஸ்மாட்போனானது 6.6 அங்குல திரையுடன், மிகுந்த சுமூகமாகப் பயன்படுத்தும் வகையில் 90Hz திறன் கொண்டது. இதில் T7100 என்ற புராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக 5000mAh திறன் கொண்ட பேட்டரியுடன் 10W சார்ஜிங் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் 13MP கேமராவும் முன்பக்கம் 8MP செல்ஃபி கேமராவும் கொண்டுள்ளது.

64GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 6,499க்கும், 128GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 6,999க்கும் இந்தியாவில் விற்கப்படுகிறது.

இதையும் படிக்க | அதிக பேட்டரியுடன் தயாராகும் ஷாவ்மி 16! இந்தியாவில் எப்போது அறிமுகம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு: உபரி நீர் மதகுகள் மூடல்!

பிரிட்டன் அமைச்சரைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது; ஆனால், பிகார் தேர்தல் காரணமா? - காங்கிரஸ் கேள்வி

விஜய் வியூகம் வெற்றி பெறுமா? - அா்ஜுன் சம்பத்

மீட்புப் பணி போட்டி: முதலிடம் பெற்ற ஊா்க்காவல் படையினருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT