ஒன்பிளஸ் 13எஸ் படம் / நன்றி - ஒன்பிளஸ்
வணிகம்

இந்தியாவின் முதல் 5.5ஜி ஸ்மார்ட்போன்! ஜூன் 5-ல் அறிமுகம்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஜூன் 5ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாகிறது.

DIN

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஜூன் 5ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாகிறது.

பல்வேறு கணிப்புகளுக்கு மத்தியில் ஒன்பிளஸ் 13 எஸ் ஸ்மார்ட்போன், இந்தியாவில் அறிமுகமாகும் தேதி உறுதியாகியுள்ளதால், ஒன்பிளஸ் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒன்பிளஸ் நிறுவனம், ஆப்பிள், சாம்சங் ஸ்மாட்ர்போன்களுக்கு அடுத்தபடியான இடத்தை இந்திய சந்தையில் பிடித்துள்ளது.

கேமரா மற்றும் வடிவமைப்பு தரத்தில் பிரீமியம் மாடல் ஸ்மார்ட்போன்களைக் கொண்ட நிறுவனமாக ஒன்பிளஸ் பெயர்பெற்றுள்ளது. இதனிடையே இந்தியப் பயனர்களைக் கவரும் வகையில் ஒன்பிளஸ் 13 எஸ் அறிமுகமாகவுள்ளது.

ஒன்பிளஸ் 13 எஸ் சிறப்புகள் என்னென்ன?

கருப்பு வெல்வெட், இளஞ்சிவப்பு, பச்சைப் பட்டுப்புடவை நிறங்களில் ஒன்பிளஸ் 13 எஸ் கிடைக்கின்றன.

ஸ்நாப்டிராகன் 8 எலைட் புராசஸர் கூடுதல் பலத்தைக் கொடுக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் பயன்பாட்டின்போது வெப்பம் ஏற்படுவதைத் தடுக்க க்ரியோ வெலோசிட்டி என்ற தனிப்பான் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், வெப்பம் ஏற்படுவது தடுக்கப்படும்.

ஒருமுறை சார்ஜ் செய்தால், 14 மணிநேரத்துக்கு வாட்ஸ் ஆப் அழைப்புகள் மூலம் பேசலாம். சாதாரண தொலைத்தொடர்பு அழைப்பில் 7 மணிநேரம் பேசலாம்.

ஒன்பிளஸ் 13 எஸ் ஸ்மார்ட்போனானது 5.5G இணைப்புடனும் பொருந்தக்கூடியது. தில்லி மெட்ரோ போன்ற இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இணையத்தைப் பயன்படுத்தினாலும், விரைவில் வைஃபை உடன் இணையும் திறன் கொண்டது என ஒன்பிளஸ் கூறுகிறது.

12GB உள் நினைவகமும் 256GB நினைவகமும் கொண்ட ஸ்மார்ட்போன், ரூ. 42,998-க்கு கிடைக்கிறது. உள் நினைவகம் மற்றும் நினைவக திறன் குறையுமாயின், விலையும் அதற்கேற்ப குறையும்.

இதையும் படிக்க | ஹீரோ அறிமுகப்படுத்தும் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுனாமி ஒத்திகை: ஆட்சியா் ஆலோசனை

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகா் சதுா்த்தி

வேளாங்கண்ணிக்கு திரளானோா் பாத யாத்திரை

காரைக்கால் கோயிலில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு

மீனவ கிராமங்களில் குடியிருப்போருக்கு மனைப் பட்டா எம்எல்ஏ வலியுறுத்தல்

SCROLL FOR NEXT