ரூபாய் மதிப்பு உயர்வு PTI
வணிகம்

ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்வு! ரூ. 85.40

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ. 85.40 காசுகளாக நிறைவு பெற்றது.

DIN

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இன்றைய (மே 19) வணிக நேர முடிவில் 17 காசுகள் உயர்ந்து ரூ. 85.40 காசுகளாக நிறைவு பெற்றது.

கடைசி வணிக நாளான கடந்த வெள்ளிக்கிழமை (மே 16) ஒரு காசு உயர்ந்து ரூ. 85.53 காசுகளாக இருந்தது. அதனோடு ஒப்பிடுகையில் இன்றைய வணிக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்துள்ளது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணியில் இந்திய ரூபாய் மதிப்பு வணிக நேரத் தொடக்கத்தில் 16 காசுகள் உயர்ந்து 85.41 காசுகளாக இருந்தது.

நேர்மறையாகவே வணிகம் தொடங்கிய நிலையில், ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு, வணிக நேர முடிவில் 17 காசுகள் உயர்வுடன் ரூ. 85.40ஆக முடிந்தது.

அமெரிக்க கடன் மதிப்பீடு குறைவு மற்றும் இந்திய சந்தைகளில் நிலவிய சீரான வெளிநாட்டு முதலீடு போன்றவை ரூபாய் மதிப்பு உயர்வதற்கான காரணமாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேபோன்று கச்சா எண்ணெய் விலையும் 0.43 காசுகள் குறைந்து 65.13 டாலர்களாக விற்பனையாகிறது.

இதையும் படிக்க | சரிவுடன் முடிந்த பங்குச் சந்தை! ஐடி துறை பங்குகள் வீழ்ச்சி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வங்கி ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் தா்னா போராட்டம்

‘தகுதியுள்ள வாக்காளா்கள் யாரும் விடுபடக்கூடாது’

மாற்றுத்திறனாளிகள் தா்னா போராட்டம்

பிகாா் தோ்தல்: இதுவரை ரூ.108 கோடி மதிப்பில் ரொக்கம், மதுபானம் பறிமுதல் - தலைமைத் தோ்தல் ஆணையம் தகவல்

நிவாரணப் பணத்தை பேத்திக்கு அளிக்க மறுக்கும் மருமகன் மீது ஆட்சியரிடம் புகாா்

SCROLL FOR NEXT