கோப்புப் படம் 
வணிகம்

பங்குச் சந்தை வணிகம் சரிவு! முதலீட்டாளர்களுக்கு ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!

சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் 1% வரை சரிந்தன.

DIN

இந்திய பங்குச் சந்தை வணிகம் நேற்றைத் தொடர்ந்து இன்றும் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் 1% வரை சரிந்தன.

புள்ளிப் பட்டியலில் அனைத்துத் துறை பங்குகளும் சரிவுடன் காணப்பட்டன. பெரிய நிறுவனங்களின் பங்குகளும் சரிந்தன. டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன.

அதிகபட்சமாக சென்செக்ஸ் பட்டியலில் ஈடர்னல், எம்&எம், அல்ட்ராடெக் சிமென்ட், பவர் கிரிட், நெஸ்ட்லே இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலிவர்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 1.75% முதல் அதிகபட்சமாக 4.1% வரை சரிந்திருந்தன.

நேற்றும் பங்குச் சந்தை சரிவுடனே காணப்பட்டது. சென்செக்ஸில் மட்டும் 443.67 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதன்மூலம் சமீபத்திய நிலவரப்படி, முதலீட்டாளர்களுக்கு ரூ. 5.47 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 872.98 புள்ளிகள் சரிந்து 81,186.44 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 1.06 சதவீதம் சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 261.55 புள்ளிகள் சரிந்து 24,683.90 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 1.05 சதவீதம் சரிவாகும்.

2 நிறுவனப் பங்குகள் மட்டுமே உயர்வு

வணிகத்தின் தொடக்கத்தில் 82,116 புள்ளிகளாகத் தொடங்கிய சென்செக்ஸ், 82,250 வரை சென்றது. இது இன்றைய நாளின் அதிகபட்ச உயர்வாகும். நாளின் பிற்பாதியில் சற்று சரிந்து 81,153 என்ற இன்றைய நாளின் அதிகபட்ச சரிவை எட்டியது.

வணிக நேர முடிவில், 872 புள்ளிகள் வரை சரிந்து 81,186 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 2 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் இருந்தன. டாடா ஸ்டீல் 0.72%, இன்ஃபோசிஸ் 0.06% உயர்ந்திருந்தன. எஞ்சிய 28 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

அதிகபட்சமாக ஈடர்னல் -4.10%, மாருதி சுசூகி -2.71%, எம்&எம் -2.07%, நெஸ்ட்லே இந்தியா -2.05%, பவர் கிரிட் -2.03%, அல்ட்ராடெக் சிமென்ட் -1.95%, பஜாஜ் ஃபைனான்ஸ் -1.91%, ஹிந்துஸ்தான் யூனிலிவர்ஸ் -1.75%, பஜாஜ் ஃபின்சர்வ் -1.63% சரிந்திருந்தன.

நிஃப்டி நிலவரம்

நிப்ஃடியை பொறுத்தவரை 24,996 புள்ளிகளுடன் தொடங்கியது. அதிகபட்சமாக 25,010 புள்ளிகள் வரை உயர்ந்தது. பிற்பாதியில் தொடர்ந்து சரிந்து அதிகபட்சமாக 24,669 புள்ளிகள் வரை சரிந்தது. வணிக நேர முடிவில் 261 புள்ளிகள் சரிந்து 24,683 புள்ளிகள் வரை சரிந்தது.

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், ஹிண்டல்கோ, டாக்டர் ரெட்டி, இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

இதேபோன்று ஈடர்னல், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், மாருதி சுசூகி, எய்ச்சர் மோட்டார்ஸ், சிப்லா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

இதையும் படிக்க | ஜூன் 3-ல் அறிமுகமாகும் டாடா ஹாரியர் இவி! என்னென்ன எதிர்பார்க்கலாம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: இந்தியா நம்பிக்கை

நாளைய மின்தடை

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

SCROLL FOR NEXT