இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), தங்களிடம் முதலீடு செய்யப்படும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களை 20 அடிப்படைப் புள்ளிகள் (0.2 சதவீதம்) குறைத்துள்ளது.
இதுகுறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நிலை வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்கள் 20 அடிப்படைப் புள்ளிகள் (0.2 சதவீதம்) குறைக்கப்பட்டுள்ளன.
கடந்த 16-ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்துள்ள இந்த வட்டி விகிதக் குறைப்பு குறிப்பிட்ட பருவகாலம் கொண்ட வைப்பு நிதிக்கு மட்டும் பொருந்தும்.
அதன்படி, இனி 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்குக் கீழ் உள்ள வைப்பு நிதிக்கு 6.7 சதவீதமாகவும், 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்கு கீழ் உள்ள வைப்பு நிதிக்கு 6.55 சதவீதமாகவும் வட்டி விகிதம் இருக்கும்.
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான வைப்பு நிதிக்கு வட்டி விகிதம் 6.3 சதவீதமாகவும், 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு கீழ் உள்ள வைப்பு நிதிக்கு 6.5 சதவீதமாகவும் இருக்கும்.
குறிப்பிட்ட பருவகாலத் திட்டமான ‘அம்ரித் வ்ரிஷ்டி’ (444 நாள்கள்) வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.05 சதவீதத்தில் இருந்து 6.85 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.