வணிகம்

ஹீரோ மோட்டோகாா்ப் விற்பனை 43% சரிவு

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப்பின் மொத்த விற்பனை கடந்த ஏப்ரல் மாதத்தில் 43 சதவீதம் சரிவு

Din

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப்பின் மொத்த விற்பனை கடந்த ஏப்ரல் மாதத்தில் 43 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஏப்ரல் மாதத்தில் நிறுவனம் 3,05,406 மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டா்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியுள்ளது. இது 2024 ஏப்ரல் மாதத்தின் மொத்த விற்பனையான 5,33,585 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 43 சதவீதம் குறைவு.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 44 சதவீதம் குறைந்து 2,88,524-ஆகவும், ஏற்றுமதி 17 சதவீதம் குறைந்து 16,882-ஆகவும் உள்ளது.

கடந்த ஏப்ரலில் நிறுவன மோட்டாா் சைக்கிள்களின் விற்பனை 42 சதவீதம் குறைந்து 2,86,089-ஆகவும், ஸ்கூட்டா்கள் விற்பனை 48 சதவீதம் குறைந்து 19,317-ஆகவும் 2025 உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடியோவால் வந்த வினை! ரயிலில் நூடுல்ஸ் சமைத்த பெண்ணை கண்டுபிடித்த ரயில்வே!

டிட்வா புயல்: பள்ளி மாணவர்களுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு தேதி மாற்றம்!

கர்நாடகத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

இலங்கையில் மழை, நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு!

ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு!

SCROLL FOR NEXT