வணிகம்

சம்வர்தனா மதர்சன் 4-வது காலாண்டு லாபம் 23% சரிவு!

சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல், மார்ச் 2025ல் முடிவடைந்த 4-வது காலாண்டு முடிவில் அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபமானது 23 சதவிகிதம் சரிந்து ரூ.1,050 கோடியாக உள்ளது என்றது.

DIN

புதுதில்லி: ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை தயாரிப்பாளரான சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம், மார்ச் 2025ல் முடிவடைந்த 4-வது காலாண்டு முடிவில் அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபமானது 23 சதவிகிதம் சரிந்து ரூ.1,050 கோடியாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

2023-24 ஜனவரி முதல் மார்ச் வரையான மாதங்களில் நிறுவனமானது ரூ.1,372 கோடி வரிக்குப் பிந்தைய லாபமாக பதிவு செய்தது. செயல்பாடுகளிலிருந்து அதன் மொத்த வருவாய் ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.27,058 கோடியிலிருந்து ரூ.29,317 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நிதியாண்டு 2025ல் ரூ.3,803 கோடியாக இருந்த அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம், கடந்த ஆண்டு இது ரூ.2,716 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் வருவாய் ரூ.98,692 கோடியிலிருந்து ரூ.1,13,663 கோடியாக அதிகரித்துள்ளது.

ரூ.1 லட்சம் முக மதிப்புள்ள, மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிடுவதற்கு, அதன் வாரியம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் இன்று 2.29 சதவிகிதம் உயர்ந்து ரூ.152.15 ஆக முடிவடைந்தது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ.85.48 ஆக முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT