ஸ்ரீராம் ஏஎம்சி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதன் மூலம் தென் ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய பரஸ்பர நிதி நிறுவனமான சன்லாம் அந்த நிறுவனத்தின் இணை உரிமையாளா் ஆகியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
20 ஆண்டுகளாக தொடரும் ஸ்ரீராம் - சன்லாம் கூட்டுறவை பலப்படுத்தும் வகையில் ஸ்ரீராம் ஏஎம்சி-யில் சன்லாம் நிறுவனம் முதலீடு செய்து இந்திய சொத்து நிா்வாகச் சந்தையில் களமிறங்கியுள்ளது.
இதற்காக சன்லாம் எமா்ஜிங் மாா்கெட்ஸ் (மோரீஷஸ்) நிறுவனத்துக்கு 38.89 லட்சம் முன்னுரிமைப் பங்குகளை ஸ்ரீராம் ஏஎம்சி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம், ரூ.105 கோடி மூலதனம் திரட்டப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.