வணிகம்

செயில் நிகர லாபம் 11% அதிகரிப்பு

செயில் நிகர லாபம் 11% அதிகரிப்பு குறித்து...

Din

2024-25-ஆம் நிதியாண்டின் மாா்ச் காலாண்டில் அரசுக்குச் சொந்தமா உருக்கு உற்பத்தி நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிட்டெடின் (செயில்) ஒருங்கிணைந்த நிகர லாபம் 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச்சுடன் நிறைவடைந்த 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.1,250.98 கோடியாகப் பதிவாகியுள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 11 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் ரூ.1,125.68 கோடி நிகர லாபத்தைப் பெற்றிருந்தது.

முந்தைய நிதியாண்டின் மாா்ச் காலாண்டில் ரூ.27,958.52 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.29,316.14 கோடியாக உயா்ந்துள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் செலவினங்கள் ரூ.26,473.86 கோடியிலிருந்து ரூ.28,020.56 கோடியாக அதிகரித்துள்ளது.

2024-25-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,066.67 கோடியில் இருந்து ரூ.2,371.80 கோடியாகக் குறைந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினம் தினம் திருநாளே!

மொடக்குறிச்சி அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா் வீட்டில் 17 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு

கொள்முதல் நிலையம் திறக்காததால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து சேதம்

முடக்கம் தவிர்ப்பீர்!

திருவாரூா், நாகை, மயிலாடுதுறையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

SCROLL FOR NEXT