மும்பை: சாலேட் ஹோட்டல் நிறுவனத்தின் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.154.81 கோடி என அறிவித்துள்ளது நிறுவாகம்.
2024-25 ஆம் ஆண்டின் 2-வது காலாண்டில் நிறுவனம் ரூ.138.51 கோடி இழப்பை சந்தித்ததாக சாலேட் ஹோட்டல் தெரிவித்தது.
மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாடுகளிலிருந்து கிடைத்த வருவாய் 95% அதிகரித்து ரூ.735.3 கோடியாக உள்ளது. இதுவே கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் ரூ.377.05 கோடியாக இருந்தது.
நிலையற்ற வெளிப்புற நிலைமைகளுக்கு மத்தியிலும், எங்கள் குழுக்கள் தெளிவு, நிலைத்தன்மை மற்றும் நோக்கத்துடன் செயல்பட்டதாக சாலேட் ஹோட்டல் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான டாக்டர் சஞ்சய் சேத்தி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஒன் மொபிக்விக் இழப்பு ரூ.28.6 கோடியாக அதிகரிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.