மும்பை: பலவீனமான உலகளாவிய குறிப்புகள் மத்தியிலும், அன்னிய நிதி வெளியேற்றம் ஆகியவற்றால் இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தை சரிந்து முடிவடைந்தன. இருப்பினும் மெட்டல், ஆட்டோ, வங்கிப் குறியீடுகள் குறியீடுகளில் ஏற்பட்ட மீட்சியானது சற்று உயர்ந்த நிலையில் முடிவில் சரிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் குறைந்தபட்ச அளவிலிருந்து கிட்டத்தட்ட 1.5 சதவிகிதம் மீண்டு, சிறிய மாற்றத்துடன் வர்த்தகமான நிலையில் முடிவில் சென்செக்ஸ் 94.73 புள்ளிகள் சரிந்தன. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.2 சதவிகிதம் உயர்ந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடும் ஒரு நிலையான குறிப்பில் முடிவடைந்தன.
சென்செக்ஸ் 94.73 புள்ளிகள் சரிந்து 83,216.28 புள்ளிகளாகவும் நிஃப்டி 17.40 புள்ளிகள் சரிந்து 25,492.30 புள்ளிகளாக இன்று நிலைபெற்றது. இந்த வாரத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 1 சதவிகிதம் வரை சரிந்தன.
துறை வாரியாக இன்று உலோகக் குறியீடு 1.4% அதிகரித்த நிலையில் ஐடி, நுகர்வோர் சாதனங்கள், எஃப்எம்சிஜி, தொலைத்தொடர்பு ஆகியவை தலா 0.5% சரிந்தன.
சென்செக்ஸில் டெக் மஹிந்திரா, டிரென்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.சி.எல் டெக், ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஐ.டி.சி உள்ளிட்ட பங்குகுகள் சரிந்தும் பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன.
நிஃப்டி-யில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், எம்&எம் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்த நிலையில் பாரதி ஏர்டெல், டாடா கன்ஸ்யூமர், அப்பல்லோ மருத்துவமனைகள், டெக் மஹிந்திரா மற்றும் இன்டர்குளோப் ஏவியேஷன் ஆகியவை சரிந்து முடிவடைந்தன.
பங்கு சார்ந்த நடவடிக்கையில், 2-வது காலாண்டு லாபம் 172% அதிகரித்த நிலையில் ஜிஎம்எம் பங்குகள் 4% சரிந்தன. 2-வது காலாண்டு லாபம் 73% உயர்ந்த நிலையில் லூபின் பங்குகள் வெகுவாக இன்று உயர்ந்தன.
Q3CY2025 முடிவுகளையடுத்து ஏபிபி இந்தியா பங்குள் 4% சரிந்தன. பலவீனமான Q3 எண்களால் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் பங்கு விலை 4% சரிந்தன. 5.1 கோடி பங்குகள் பிளாக் டீல் வர்த்தகமான நிலையில் பாரதி ஏர்டெல் பங்குகள் 4% சரிந்தன.
2-வது காலாண்டில் இழப்புகளைப் பதிவு செய்ததால் ஆம்பர் எண்டர்பிரைசஸ் இந்தியா-வின் பங்குகள் 7% வரை சரிந்தன. தயாரிப்பு மற்றும் விரிவாக்கத் திட்டங்களின் அறிவிப்பால் ராடிகோ கேதான் பங்குகள் கிட்டத்தட்ட 4% உயர்ந்தன.
எல் அண்ட் டி ஃபைனான்ஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், பேங்க் ஆஃப் இந்தியா, யுபிஎல், எஸ்பிஐ லைஃப், கனரா வங்கி, சிசிஎல் புராடக்ட்ஸ், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பேடிஎம், ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, ஆதித்யா பிர்லா கேபிடல், கம்மின்ஸ் உள்ளிட்ட 100 பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தை எட்டியது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 1.31 சதவிகிதம் உயர்ந்து 64.21 அமெரிக்க டாலராக உள்ளது.
இதையும் படிக்க: அக்டோபரில் 6% குறைந்த மின் நுகா்வு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.