வணிகம்

பட்ஜெட் எதிரொலி: சென்செக்ஸ் 944 புள்ளிகளுடனும், நிஃப்டி 263 புள்ளிகளுடன் உயர்ந்து நிறைவு!

சென்செக்ஸ் 943.52 புள்ளிகள் உயர்ந்து 81,666.46 ஆகவும், நிஃப்டி 262.95 புள்ளிகள் உயர்ந்து 25,088.40 ஆக நிலைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: இன்றைய நிலையற்ற அமர்வில், இந்தியப் பங்குச் சந்தைக் குறியீடுகள் முந்தைய பட்ஜெட் தினத்தில் ஏற்பட்ட இழப்புகளின் ஒரு பகுதியை ஈடுசெய்து, உயர்வுடன் முடிவடைந்தன. நிஃப்டி 25,100 என்ற குறியீட்டிற்கு அருகில் சென்று நிறைவடைந்தன.

உலகளாவிய நிலவரங்களைத் தொடர்ந்து, குறியீடுகள் நிலைகுலைந்த நிலையில் தொடங்கி, இன்றைய வர்த்தக அமர்வின், முதல் பாதியில் ஏற்ற-இறக்கத்துடன் இருந்தன. பிற்பாதியில் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டியதால், பங்குச் சந்தை குறியீடுகள் மீண்டு, இன்றைய அதிகபட்ச நிலைக்கு அருகில் நிலைபெற உதவியது.

வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 943.52 புள்ளிகள் உயர்ந்து 81,666.46 ஆகவும், நிஃப்டி 262.95 புள்ளிகள் உயர்ந்து 25,088.40 ஆக நிலைபெற்றது.

நிஃப்டி மிட்கேப் 1% உயர்ந்தும், நிஃப்டி ஸ்மால்கேப் 0.6% உயர்ந்தன.

சென்செக்ஸில் பவர் கிரிட் 7.61% உயர்ந்த நிலையில் அதானி போர்ட்ஸ் 4.76% ஏற்றம் கண்டன. பாரத் எலக்ட்ரானிக்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மஹிந்திரா & மஹிந்திரா, லார்சன் & டூப்ரோ, இன்டர்குளோப் ஏவியேஷன், ஐசிஐசிஐ வங்கி மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்த நிலையில் ஆக்சிஸ் வங்கி, இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டிரென்ட் மற்றும் டைட்டன் ஆகியவை சரிந்தன.

நிஃப்டி-யில் டாடா மோட்டார்ஸ், டாடா கன்ஸ்யூமர், அதானி போர்ட்ஸ், பவர் கிரிட், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவை உயர்ந்தும், மறுபுறம் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், மேக்ஸ் ஹெல்த்கேர், சிப்லா, ஆக்சிஸ் வங்கி, இன்ஃபோசிஸ் ஆகியவை சரிந்தன.

துறை ரீதியாக, எஃப்எம்சிஜி, உலோகம், எண்ணெய் & எரிவாயு, எரிசக்தி, உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகள் 1 முதல் 2% வரை உயர்ந்த அதே நேரத்தில் ஐடி குறியீடு 0.5% சரிந்தன.

பங்கு சார்ந்த அமர்வில், இ2இ நெட்வொர்க்ஸ், அனந்த் ராஜ், பட்ஜெட்டில் வரி விடுமுறை அறிவிப்பால் தலா 5% உயர்ந்தன. முக்கிய கொள்கை அறிவிப்புகள் இல்லாத நிலையில் பாரத் டைனமிக்ஸ் 4% சரிந்தன. ஜனவரியில் வலுவான விற்பனை எண்ணிக்கையால் அதுல் ஆட்டோ பங்குகள் 8% அதிகரித்தன.

3 ஆம் காலாண்டில் சிறந்த வருவாய் இருந்தபோதிலும் சாக்சாஃப்ட் பங்கு விலை 2% சரிந்தன. இந்தூரில் ஐசிடி கட்ட நிலம் கையகப்படுத்தியதில் கேட்வே டிஸ்ட்ரிபார்க்ஸ் பங்குகள் 4% உயர்ந்தன. வலுவான 3வது காலாண்டு முடிவுகளால் சுந்தரம் ஃபைனான்ஸ் பங்குகள் 8% உயர்ந்தன. 3வது காலாண்டில் மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் டெவலப்பர்ஸ் பங்கு விலை 4% அதிகரித்தன.

ஃபைவ்-ஸ்டார் பிசினஸ் ஃபைனான்ஸ், கேஇசி இன்டர்நேஷனல், டிரான்ஸ்ஃபார்மர்ஸ் அண்ட் ரெக்டிஃபையர்ஸ் இந்தியா, பாலி மெடிக்கர், ரிலையன்ஸ் பவர், கார்போரண்டம், ஐஇஎக்ஸ், நெட்வொர்க் 18, ஆதித்யா பிர்லா ரீ, எல் அண்ட் டி டெக்னாலஜி, ஜோதி லேப்ஸ், கான்கார்ட் பயோடெக், சி. இ. இன்ஃபோ சிஸ்டம்ஸ், எஸ்ஜேவிஎன், மேக்ஸ் ஹெல்த்கேர், என்டிபிசி கிரீன் எனர்ஜி, ஜஸ்ட் டயல், ப்ளூ ஜெட் உள்ளிட்ட 350க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார குறைந்த விலையை எட்டியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய பாதுகாப்பு குறித்து ராகுல் பேசும்போது சிரித்த காங்கிரஸ் எம்.பி.க்கள்!

அச்சுறுத்தும் பணிநீக்கம்! ஏஐ தொழில்நுட்பம் மட்டுமே காரணமா? பின்னணியில் என்ன நடக்கிறது?

திருப்பரங்குன்றம் வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்புக்கேட்ட மதுரை ஆட்சியர்!

குளிர்கால சருமப் பராமரிப்பு டிப்ஸ்!

மீண்டும் தனுஷுடன் இணைந்த சாய் பல்லவி!

SCROLL FOR NEXT