முகப்பு
வணிகம்

3-ம் நாளாக சரிவில் பங்குச்சந்தை! வங்கி, உலோகப் பங்குகள் மட்டும் உயர்வு!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

Updated On : 7 நவம்பர், 2025 at 6:29 AM
தேசிய பங்குச்சந்தை - ANI
பகிர்:

பங்குச் சந்தைகள் இன்றும்(வெள்ளிக்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,150.15 என்ற புள்ளிகளில் சரிவுடன் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 307.65 புள்ளிகள் குறைந்து 83,009.10 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 78.25 புள்ளிகள் குறைந்து 25,431.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதானி போர்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, பிஇஎல், சன் பார்மா, எம்&எம், பஜாஜ் ஃபைனான்ஸ், பவர் கிரிட், கோடக் வங்கி, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சற்று ஏற்றமடைந்த நிலையில் பாரதி ஏர்டெல், எச்.சி.எல். டெக், டெக் மஹிந்திரா, டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, மாருதி சுசுகி ஆகியவை அதிக இழப்பை சந்தித்தன.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.03 சதவீதம் உயர்ந்தது. அதேநேரத்தில் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடு 0.4 சதவீதம் குறைந்தது.

துறைகளில், நிஃப்டி மெட்டல் குறியீடு 0.8 சதவீதமும் நிஃப்டி வங்கி குறியீடு 0.3 சதவீதமும் உயர்ந்த நிலையில் மற்ற துறை குறியீடுகள் சரிவைச் சந்தித்து வருகின்றன. வங்கி, உலோகப் பங்குகள் விற்பனை காரணமாக பங்குச்சந்தைகள் மீண்டு வருகின்றன.

summary

Stock Market Updates: Sensex slides over 500 pts, Nifty below 25,400

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.