புதுதில்லி: கடந்த வாரம், டாப் 10 அதிக மதிப்புள்ள ஏழு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பீடு ரூ.88,635.28 கோடி சரிந்து முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
பாரதி ஏர்டெல் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவை பங்குச் சந்தைகளின் பலவீனமான போக்கிற்கு ஏற்ப மிகப்பெரிய சரிவை சந்தித்தது.
கடந்த வாரம், பிஎஸ்இ குறியீடு 722.43 புள்ளிகள் சரிந்த நிலையில் நிஃப்டி 229.8 புள்ளிகள் சரிந்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி வங்கி, பாரதி ஏர்டெல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை சந்தை மதிப்பீட்டில் சரிவை எதிர்கொண்டாலும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட டாப் 10 அளவுகோலில் உள்ள நிறுவன பங்குகள் உயர்ந்தன.
பாரதி ஏர்டெல்லின் சந்தை மதிப்பீடு ரூ.30,506.26 கோடி சரிந்து ரூ.11,41,048.30 கோடியாகவும், டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு ரூ.23,680.38 கோடி சரிவை சந்தித்தது ரூ.10,82,658.42 கோடியாகவும், ஹிந்துஸ்தான் யூனிலீவரின் சந்தை மூலதனம் ரூ.12,253.12 கோடி சரிந்து ரூ.5,67,308.81 கோடியாகவும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மூலதனம் ரூ.11,164.29 கோடி சரிந்து ரூ.20,00,437.77 கோடியாகவும், ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மூலதனம் ரூ.7,303.93 கோடியாக சரிந்து ரூ.15,11,375.21 கோடியாகவும், இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2,139.52 கோடியாக சரிந்து ரூ.6,13,750.48 கோடியாகவும், ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பீடு ரூ.1,587.78 கோடி குறைந்து ரூ.9,59,540.08 கோடியாக இருந்தது.
இருப்பினும், எல்ஐசியின் சந்தை மூலதனம் ரூ.18,469 கோடியாக உயர்ந்து ரூ.5,84,366.54 கோடியாகவும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் சந்தை மதிப்பீடு ரூ.17,492.02 கோடி உயர்ந்து ரூ.8,82,400.89 கோடியாகவும், பஜாஜ் ஃபைனான்ஸ் சந்தை மூலதனம் ரூ.14,965.08 கோடி உயர்ந்து ரூ.6,63,721.32 கோடியாகவும் உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகவும் மதிப்புமிக்க உள்நாட்டு நிறுவனமாவும் அதனை தொடர்ந்து எச்டிஎஃப்சி வங்கி, பாரதி ஏர்டெல், டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோசிஸ், எல்.ஐ.சி. மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை உள்ளன.
இதையும் படிக்க: உலகளாவிய கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள ஸ்கோடா இந்தியா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.