புதுதில்லி: செப்டம்பர் 2025 உடன் முடிவடைந்த 2-வது காலாண்டில் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி ரூ.11.8 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. கடந்த வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இது சற்று அதிகமாகும்.
நிதியாண்டின் 2-வது காலாண்டு அதன் வருவாய் ரூ.804 கோடியாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 19.4% அதிகரித்து வலுவான வளர்ச்சியை பதிவு செய்தது.
காலாண்டில் வங்கி லாபம் ரூ.11.8 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் இது ரூ.11.2 கோடியாக இருந்தது. அதே வேளையில், முதல் முறையாக, வங்கியின் காலாண்டு வருவாய் ரூ.800 கோடி தாண்டியுள்ளது.
எங்கள் நிலையான வளர்ச்சி, வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் இதன் மூலம் பிரதிபலிக்கிறது என்றார் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அனுப்ரதா பிஸ்வாஸ்.
இதையும் படிக்க: இந்திய பங்குச் சந்தையில் மாபெரும் எழுச்சி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.