கோப்புப் படம் 
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.88.71 ஆக நிறைவு!

இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.88.71 ஆக நிலைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.88.71 ஆக நிலைபெற்றது.

இருப்பினும், உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான போக்கும், அமெரிக்க டாலர் மெதுவாக நிலைபெற்றதும், ரூபாயின் வீழ்ச்சியைக் குறைத்ததாக அன்னிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அன்னியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ரூ.88.64 ஆக தொடங்கி, டாலருக்கு நிகராக ரூ.88.64 என்ற இன்ட்ராடே அதிகபட்சத்தையும் அடைந்து, பிறகு ரூ.88.71 என்ற இன்ட்ராடே குறைந்தபட்சத்தையும் தொட்டு, அதன் முந்தைய முடிவை விட 6 காசுகள் குறைந்து ரூ.88.71 ஆக நிலைபெற்றது.

கடந்த வாரம் (வெள்ளிக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ.88.65 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகள் உயர்ந்து வருவதாலும், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதாலும் ரூபாய் சற்று எதிர்மறையான சார்புடன் வர்த்தகமானது. அதே வேளையில், இறக்குமதியாளர்களின் அமெரிக்க டாலருக்கான தேவையும் ரூபாயின் மதிப்பு மீது வெகுவான அழுத்தத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க: இந்திய பங்குச் சந்தையில் மாபெரும் எழுச்சி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்வேறு இன செடிகள் நடவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

ஹரியாணா வெடிபொருள் பறிமுதலும், காரில் ஹரியாணா எண்ணும்? வலுக்கும் சந்தேகம்?

தில்லியில் கார் வெடித்த இடத்தில் கண்டறியப்பட்ட தோட்டா!

தில்லி கார் வெடிப்பு - புகைப்படங்கள்

பயிா்க் காப்பீடு செய்ய வேளாண் துறை அழைப்பு

SCROLL FOR NEXT