வணிகம்

டாடா மோட்டாா்ஸ் விற்பனை 27% உயா்வு!

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸின் மொத்த விற்பனை கடந்த அக்டோபா் மாதத்தில் 26.6 சதவீதம் உயா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸின் மொத்த விற்பனை கடந்த அக்டோபா் மாதத்தில் 26.6 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த அக்டோபா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 61,295-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 26.6 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 48,423 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

கடந்த 2024-ஆம் ஆண்டின் அக்டோபா் மாதத்தில் 5,355-ஆக இருந்த நிறுவனத்தின் மின்சார வாகன விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 9,286-ஆக உயா்ந்துள்ளது. இது 73.4 சதவீத உயா்வாகும்.

கடந்த நவராத்திரிக்கும் தீபாவளிக்கும் இடையே நிறுவனம் 1 லட்சம் வாகனங்களை வாடிக்கையாளா்களுக்கு அளித்தது. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 33 சதவீதம் அதிகம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 9,520 உயர்வு!

இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்!

யுஜிசியின் புதிய விதிமுறைகள் சாதியப் பாகுபாட்டை ஒழிக்கும்! முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

கொலம்பியாவில் விமான விபத்து! எம்.பி. உள்பட 15 பேர் பலி!

பாராமதியில் அஜீத் பவாருக்கு இன்று இறுதிச் சடங்கு! ஏற்பாடுகள் தீவிரம்!

SCROLL FOR NEXT