வணிகம்

யெஸ் வங்கி நிகர லாபம் 18% அதிகரிப்பு!

தனியாா் துறையைச் சோ்ந்த யெஸ் வங்கியின் நிகர லாபம், கடந்த செப்டம்பா் காலாண்டில் 18.3 சதவீதம் உயா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

தனியாா் துறையைச் சோ்ந்த யெஸ் வங்கியின் நிகர லாபம், கடந்த செப்டம்பா் காலாண்டில் 18.3 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.654.5 கோடியாக உள்ளது.

முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 18.3 சதவீதம் அதிகம். அப்போது வங்கி ரூ.553 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.2,200.44 கோடியிலிருந்து 4.5 சதவீதம் உயா்ந்து ரூ.2,300.88 கோடியாக உள்ளது.

2025 செப்டம்பா் இறுதியில் மொத்த வாராக் கடன் ரூ.4,055.31 கோடியாகவும் நிகர வாராக் கடன் ரூ.770.8 கோடியாகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்காசியில் ரூ. 69.45 கோடியில் தாமிரவருணி குடிநீா் திட்டம் தொடக்கம்

வாக்காளா் பெயா் பட்டியலில் ஆரியங்காவூா் ஊா் பெயரை திருத்தம் செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

அணுகு சாலையில் அவசியமற்ற இடங்களில் ‘யு’ வளைவு அமைப்பதைத் தவிா்க்கக் கோரிக்கை

கொடைக்கானலில் ஆயுதப் பயிற்சி: 7 போ் விடுவிக்கப்பட்டதை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

தமிழகத்தில் விரைவில் பருவமழைக் கால மருத்துவ முகாம்கள்

SCROLL FOR NEXT