மும்பை: அமெரிக்க-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்த நம்பிக்கையின் மத்தியில் சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு பங்குகளில் முதலீட்டாளர்கள் வாங்கும் ஆர்வத்தால் இன்றைய பங்குச் சந்தையில் பலவீனமான நிலையில் தொடங்கிய போதும், உயர்ந்து முடிவடைந்தன.
30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 411.32 புள்ளிகள் சரிந்து 83,124.03 ஆக வர்த்தகமான நிலையில், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி ஆரம்ப வர்த்தகத்தில் 125.1 புள்ளிகள் சரிந்து 25,449.25 ஆக வர்த்தகமானது. வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 335.97 புள்ளிகள் உயர்ந்து 83,871.32 புள்ளிகளாகவும், நிஃப்டி 120.60 புள்ளிகள் உயர்ந்து 25,694.95 புள்ளிகளாக நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைகளின் நேர்மறையான போக்குகளால், சந்தை இன்று உயர்வுடன் தொடங்கியது. புதுதில்லியில் கார் வெடிப்பு குறித்த கவலைகளுக்கு மத்தியில், உள்நாட்டு சந்தை முதல் பாதி எதிர்மறையாக வர்த்தகமானது.
இருப்பினும், அமெரிக்க செனட் மிக நீண்ட பணிநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மசோதாவை நிறைவேற்றியதாலும், பிற்பகல் அமர்வில் ஆட்டோ, உலோகம், ஐடி உள்ளிட்ட பங்குகள் முதலீட்டாளர்கள் கொள்முதல் செய்ததால், இன்ட்ராடே இழப்புகள் நீக்க பெற்று, நாளின் உச்சத்தை நோக்கி சென்றது இந்திய பங்குச் சந்தை.
சென்செக்ஸில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், மஹிந்திரா & மஹிந்திரா, அதானி போர்ட்ஸ், எச்.சி.எல் டெக்னாலஜிஸ், எடர்னல், இன்ஃபோசிஸ், பாரதி ஏர்டெல், சன் பார்மாசூட்டிகல்ஸ், லார்சன் & டூப்ரோ, ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகியவை உயர்ந்தன. பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள், கோடக் மஹிந்திரா வங்கி, பவர் கிரிட் மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிவடைந்தன.
நிஃப்டி-யில் இன்டர்குளோப் ஏவியேஷன், பாரத் எலக்ட்ரானிக்ஸ், பஜாஜ் ஆட்டோ, எம்&எம் மற்றும் எச்.சி.எல் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்த நிலையில் பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஓஎன்ஜிசி, டிஎம்பிவி, பவர் கிரிட் ஆகிய பங்குகள் சரிந்து முடிவடைந்தன.
துறைகளில், பொதுதுறை வங்கி, சுகாதாரப் பராமரிப்பு தலா 0.3 சரிந்தன. அதே நேரத்தில் தொலைத்தொடர்பு குறியீடு 1.5 சதவிகிதமும், ஐடி குறியீடு 1 சதவிகிதமும் உயர்ந்தன. எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடு 0.7சதவிகிதமும், ஆட்டோ குறியீடு 1 சதவிகிதமும் உலோக குறியீடு 0.6 சதவிகிதமும் உயர்ந்தன.
பங்கு சார்ந்த நடவடிக்கையில், 2-வது காலாண்டு வருவாய்க்குப் பிறகு 7% சரிந்த பஜாஜ் ஃபைனான்ஸ். இழப்புகள் குறைந்ததால் 2-வது காலாண்டில் வோடபோன் ஐடியா பங்குகள் 8% உயர்ந்தன. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் கோகல்டாஸ் எக்ஸ்போர்ட்ஸ் கையெழுத்திட்டதால் அதன் பங்குகள் 5% உயர்ந்தன. ஸ்வான் டிஃபென்ஸ் பங்கின் விலை 5% அதிகரித்தன. பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை அதன் நிர்வாக இயக்குநர், தலைமை நிர்வாக அதிகாரி ராஜினாமா செய்ததால் 3% சரிந்தன.
கிராஃப்ட்ஸ்மேன், பாரத் ஃபோர்ஜ், பிஹெச்இஎல், நால்கோ, அசோக் லேலேண்ட், ஹிட்டாச்சி எனர்ஜி, அசாஹி இந்தியா, முத்தூட் ஃபைனான்ஸ், கேன் ஃபின் ஹோம்ஸ், ஐஓசி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டோரண்ட் பார்மா, எம்சிஎக்ஸ் இந்தியா, லாரஸ் லேப்ஸ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தை எட்டின.
அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.4,114.85 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்த நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.5,805.26 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
ஆசிய சந்தைகளில், தென் கொரியா கோஸ்பி, ஹாங்காங் ஹாங் செங் மற்றும் ஜப்பான் நிக்கி 225 குறியீடு உயர்ந்த நிலையில், ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு சரிந்தன. அதே வேளையில் ஐரோப்பிய சந்தைகள் உயர்ந்தன. நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க சந்தைகள் உயர்ந்து முடிவைடந்தன.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய், பீப்பாய்க்கு ஒன்றுக்கு 0.33% அதிகரித்து 64.27 அமெரிக்க டாலராக உள்ளது.
இதையும் படிக்க: யெஸ் வங்கி நிகர லாபம் 18% அதிகரிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.