முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டார் இந்தியா அதன் முதன்மை காரான டக்சன் மாடலின் உற்பத்தியை இந்திய சந்தையிலிருந்து முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. ஐந்து இருக்கைகள் கொண்ட இந்த எஸ்யூவி-யின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.27.32 லட்சம் முதல் ரூ.33.64 லட்சம் வரை இருந்தது.
ஹூண்டாய் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ஹூண்டாய் டக்சன் இந்திய சந்தையில் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான தொழில்துறை நடைமுறைக்கு ஏற்ப, நிறுவனத்தின் கொள்கையின்படி தற்போதுள்ள அனைத்து டக்சன் வாடிக்கையாளர்களுக்கும் தொடர்ச்சியான சேவை மற்றும் ஆதரவை வழங்க நிறுவனம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில், அதாவது ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், இந்த எஸ்யூவி-யின் விற்பனை 450 கார்கள் மட்டுமே.
சமீபத்திய சரக்கு மற்றும் சேவை வரியை தொடர்ந்து, ஹூண்டாய் போர்ட்ஃபோலியோவில் டக்சன் அதிகபட்ச விலைக் குறைய பெற்று, இந்த எஸ்யூவி ரூ.2.40 லட்சம் வரை மலிவாக மாறியது. இருப்பினும் கார் பிரியர்களுக்கும் கூடுதல் விலையால் எட்டாக்கனியாக மாறியது டக்சன்.
டக்சன் நிறுத்தப்பட்டதால், தனது போர்ட்ஃபோலியோவில் எக்ஸ்டர், வென்யூ, கிரெட்டா மற்றும் அல்கசார் போன்ற மாடல்கள் தற்போது விற்பனை செய்து வருகிறது ஹூண்டாய்.
இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ மற்றும் கிரெட்டா ஆகிய மாடல்கள் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவிகளில் ஒன்றாகும்.
இதையும் படிக்க: பி என் காட்கில் ஜுவல்லர்ஸ் 2-வது காலாண்டு லாபம் இரட்டிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.