கோப்புப் படம் 
வணிகம்

பங்குச் சந்தைகள் 3-வது நாளாக உயர்வுடன் நிறைவு!

சென்செக்ஸ் 595.19 புள்ளிகள் உயர்ந்து 84,466.51 ஆகவும், நிஃப்டி 180.85 புள்ளிகள் உயர்ந்து 25,875.80 ஆக நிலைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: உலகளாவிய குறிப்புகளால் ரியாலிட்டி பங்குகளை தவிர, பல்வேறு துறையின் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியதால், இன்றைய வர்த்தகத்தில் இந்திய பெஞ்ச்மார்க் குறியீடு தொடர்ந்து மூன்றாவது அமர்வாக உயர்ந்து, இன்ட்ராடேவில் நிஃப்டி 25,850 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது.

நேர்மறையான உலகளாவிய குறிப்புகளால் நிஃப்டி நாளின் அதிகபட்சமாக 25,934.55 ஐ எட்டியது. அதே வேளையில், பீகாரில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு இருப்பது போல வெளியிட்டுள்ள நிலையில், இந்தியா-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஆகியவற்றால் பங்குச் சந்தை உயர்வுடன் முடிடைந்தன.

வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 595.19 புள்ளிகள் உயர்ந்து 84,466.51 ஆகவும், நிஃப்டி 180.85 புள்ளிகள் உயர்ந்து 25,875.80 ஆக நிலைபெற்றது. நிஃப்டி மிட்கேப் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு 61,011 புள்ளிகளை எட்டிய அதே நேரத்தில் ஸ்மால்கேப் குறியீடு 0.8 சதவிகிதம் வரை உயர்ந்தன.

நிஃப்டி வங்கி குறியீடும் அதன் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு 58,577.50 புள்ளிகளை நெருங்கி, 0.23% உயர்ந்து 58,274.65 புள்ளிகளில் முடிவடைந்தன.

சென்செக்ஸில் ஏசியன் பெயிண்ட்ஸ், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் ஃபின்சர்வ், அதானி போர்ட்ஸ், எச்.சி.எல் டெக்னாலஜிஸ், பாரதி ஏர்டெல், இன்ஃபோசிஸ், டிரென்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமென்ட், சன் பார்மாசூட்டிகல்ஸ், எடர்னல், டைட்டன் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை உயர்ந்தும் மறுபுறம் டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் - பயணிகள் வாகனங்கள், டாடா மோட்டார்ஸ் - வணிக வாகனங்கள், பாரத் எலக்ட்ரானிக்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் பவர் கிரிட் உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிவடைந்தன.

நிஃப்டி-யில் ஏசியன் பெயிண்ட்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், டெக் மஹிந்திரா, டிசிஎஸ், எச்டிஎஃப்சி லைஃப் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் அதே நேரத்தில் டாடா ஸ்டீல், டிஎம்பிவி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சரிந்து முடிந்தன.

ரியல்டிட்டி தவிர, மீடியா, ஆட்டோ, டெலிகாம், ஐடி, நுகர்வோர் சாதனங்கள் 1 முதல் 2% வரை உயர்ந்து மற்ற அனைத்து துறை குறியீடுகளும் சரிவுடன் முடிவடைந்தன.

பங்கு சார்ந்த நடவடிக்கையில், Q2 லாபம் 61% உயர்ந்ததால் பிஎஸ்இ பங்குகள் 5% அதிகரித்தன. ஆட்டோடெஸ்க் உடனான கூட்டணியால் எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ் பங்குகள் 1.5% உயர்ந்தன. Q2 சிறந்த வருவாய் காரணமாக ஆவாஸ் ஃபைனான்சியர்ஸ் பங்குகள் 5% அதிகரித்த நிலையில் குஜராத் ஃப்ளோரோ கெமிக்கல்ஸ் Q2 லாபம் 48% உயர்ந்ததால் அதன் பங்கு 5% உயர்ந்தன. லாபம் 48% சரிந்த நிலையில் தெர்மாக்ஸ் பங்குகள் 3% சரிவுடன் நிறைவு.

Q2 லாபம் 27% உயர்ந்த நிலையில் கிர்லோஸ்கர் ஆயில் என்ஜின்ஸ் பங்குகள் 11% உயர்ந்தன. வலுவான வருவாய் காரணமாக அட்வான்ஸ்டு என்சைம் பங்குகள் 8% அதிகரிப்பு. Q2 லாபம் 48% அதிகரித்ததால் குஜராத் ஃப்ளோரோ கெமிக்கல்ஸ் பங்குகள் 5% உயர்ந்தன. சிறந்த Q2 முடிவுகளால் மேக்ஸ் ஃபைனான்சியல் பங்கின் விலை 5% அதிகரித்தன. Q2 லாபம் 72% அதிகரித்ததால் ஜாகிள் ப்ரீபெய்ட் ஓஷன் சர்வீசஸ் பங்கின் விலை 4% உயர்ந்தன. வலுவான Q2 வருவாய் காரணமாக ஏசியன் பெயிண்ட்ஸ் பங்குகள் 4% உயர்ந்தன.

ஜிஇ ஷிப்பிங், மேக்ஸ் ஃபைனான்சியல், அதானி போர்ட்ஸ், கனரா வங்கி, டைட்டன் கம்பெனி, அதானி எனர்ஜி, அல்கெம் லேப், ஹிட்டாச்சி எனர்ஜி, பாங்க் ஆஃப் இந்தியா, ஆசியன் பெயிண்ட்ஸ், நால்கோ, பிஹெச்இஎல், கேன் ஃபின் ஹோம்ஸ், எம்&எம், ஹெச்பிசிஎல், ஐஓசி, பாரத் ஃபோர்ஜ், அசோக் லேலேண்ட் உள்ளிட்ட 130க்கும் பங்குகள் பிஎல்இ-யில் இன்று 52 வார உச்சத்தை எட்டின.

ஐரோப்பிய சந்தைகள் உயர்ந்து வர்த்தகமான நிலையில் அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) உயர்வுடன் முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.84% குறைந்து பீப்பாய் ஒன்றுக்கு 64.61 அமெரிக்க டாலராக உள்ளது.

புதிய பங்கு வெளியீடு

முன்னணி பங்கு தரகு தளமான குரோவ்-வின் தாய் நிறுவனமான பில்லியன் பிரைன்ஸ் கேரேஜ் வென்ச்சர்ஸ் பங்குகள், பட்டியலிடப்பட்ட நாளில் 31.33% அதிகரித்து ரூ.131.33 ஆக முடிவடைந்தன.

இதையும் படிக்க: அடுத்த தலைமுறைக்கான டிராக்டா்: டாஃபே அறிமுகம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய - அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் உரையாடல்!

காற்றே பூங்காற்றே... ரகுல் ப்ரீத் சிங்!

தில்லி கார் வெடிப்பு: பயங்கரவாத தாக்குதலாக அறிவித்தது அரசு!

கானாவில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கூட்டநெரிசல்! 6 பேர் பலி!

குடியிருப்புக்குள் உலா வந்த காட்டு யானை! மக்கள் அச்சம்!

SCROLL FOR NEXT